தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘சாதி, மத, இன, மொழி அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட மனிதத்தை முன்னெடுப்போம்!’

5 Oct 2026, 9:03 pm
‘சாதி, மத, இன, மொழி அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட மனிதத்தை முன்னெடுப்போம்!’

‘சாதி, மத, இன, மொழி அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட மனிதத்தை முன்னெடுப்போம்!’

சென்னை, அக்.5-இராமலிங்கர் பணி மன்றத்தின் சார்பில் அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா காந்தி விழாவெள்ளியன்று (அக்.2)சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் 2026ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இதன்படி, முதல் பரிசு, ‘இசபெல் வில்கெர்சனின் ‘சாதி’ ஆங்கில வரலாற்று ஆய்வு நூலை மொழிபெயர்த்த மயிலை பாலுவுக்கும், ஜப்பானிய எழுத்தாளர் யோகோ ஒகா வாவின் நாவலை, ‘நினைவுகளின் வேட்டைக்களம்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்த சி.லுபுனா லிலானிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

‘இஸ்தான்புல்’ என்ற நாவலுக்காக முடவன் குட்டி முகமது அலிக்கும், ‘பொறுமையற்றவர்கள்’ என்ற நூலுக்காக ஆர்.காயத்ரிக்கும் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.‘செயற்கை நுண்ணறிவின் சுருக்கமான வரலாறு’ நூலுக்காக எம்.ஜோதிமணி மற்றும் பெ.சசிக்குமார், ‘பிரியாணி’ சிறுகதை தொகுப்பிற்காக டி.எம்.ரகுராமுக்கும், ‘திருஞான சம்பந்தர் காலம் ஓர் ஆராயச்சி’என்ற வரலாறு நூலுக்காக சு.மோதிலால் நேருவுக்கும், ‘நிழல்களுக்கு எதிராக’ நாவலுக்காக சித்தார்த்தன் சுந்தரத்திற்கும் 3ஆம் பரிசு வழங்கப்பட்டது.இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிபேசிய நல்லி குப்புசாமி, “மொழிபெயர்ப்பு இல்லாமல் இலக்கிய பறிமாற்றம் நிகழாது. நமது மொழியின்வளமையை மொழிபெயர்ப்பின்றி பறிமாற முடியாது” என்றார்.

விருதாளர்கள் சார்பில்ஏற்புரையாற்றிய மயிலைபாலு, “காந்தியின் குயிட் இந்தியா இயக்கத்தை ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்றுதான் பொதுவாக மொழிபெயர்ப்பார்கள். ஆனால் தமிழில், ‘வெள்ளையனே வெளியேறு’ என்று மொழிபெயர்த்தது மக்களை உணர்ச்சி கொண்டு முழக்கமிட வைத்தது. மொழிபெயர்ப்புக்கும் மொழியாக்கக்திற்கும் உள்ள வேறுபாடு இது” என்றார்.

“ஜப்பானிய மொழியில்இருந்து நேரடியாக தமிழுக்கு மொழிபெயர்த்துள்ள சி.லுபுனா லினானியிடம், ஜப்பானிய மொழியின் தூண்டுதலால் இந்தப் பெயரை வைத்துக் கொண்டீர்களா என்று கேட்டேன். அவருடைய தந்தை சிவசுப்பையா, ஒருவிபத்தில் உயிர் பிழைத்து மறுபிறவி கிடைக்கக் காரணமான இருந்தவர்கள் இருவர். ஒருவர் லுபுனா, இஸ்லாமியர். மற்றொருவர் லினானி, கிறித்துவர். ஆகவே, அவர்களது இருவர் பெயரையும் இணைத்துத் தனக்கு தந்தை பெயர் சூட்டினார்என்றார். இந்த உணர்வுபூர்வ மக்கள் ஒற்றுமைதான் இன்றைய இந்தியாவுக்கு தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.