முந்தய பக்கம்

வடலூரில் வள்ளலாரின் 204-வது பிறந்த நாள் கொடியேற்றம்

6 Oct 2026, 1:22 am
வடலூரில் வள்ளலாரின்  204-வது பிறந்த நாள் கொடியேற்றம்

வடலூரில் வள்ளலாரின் 204-வது பிறந்த நாள் கொடியேற்றம்

வடலூர், அக். 5-அருட்பிரகாச வள்ள லாரின் 204-வது பிறந்த நாள் விழா வடலூரில் திங்கள்கிழமை (அக்.5) விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்ற னர்.

விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு சன்மார்க்க அன்பர்கள் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்தனர். காலை 7.30 மணியளவில் சத்தியதருமசாலையில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, சத்திய ஞான சபைக்கு இடம் தானமாக வழங்கிய பார்வதி புரம் கிராம மக்கள், பழங்கள்,பூமாலைகள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்த னர். அங்குபுதிதாக அமைக்கப்பட்ட கொடி மரத்தில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது.வள்ளலார் ஏற்றி வைத்த அணையா அடுப்பு மூலம் சத்திய தருமசாலையில் நாள் முழுவதும் பக்தர்கள் மற்றும்பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. மருதூரில் உள்ள வள்ளலார் பிறந்த இல்லத்திலும் சன்மார்க்கக்கொடியேற்றம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றன.வள்ளலார் வலி யுறுத்திய ஜீவகாருண்யம், சமத்துவம், பசிப்பிணி போக்குதல், அனைத்து உயிர்களிடத்தும் அன்புசெலுத்துதல் ஆகிய கொள்கைகளை நினைவு கூரும் வகையில் விழா நடைபெற்றது.

Share
FacebookXWhatsAppTelegram