முந்தய பக்கம்

காதலர் தின விழா கொண்டாட்டம்

14 Feb 2026, 4:33 pm
காதலர் தின விழா கொண்டாட்டம்
<p><strong>காதலர் தின விழா கொண்டாட்டம்</strong></p> <p>கோவை, பிப்.14- வேறுபாடுகளை கடந்து மனி தர்களை ஒன்றிணைக்கும் அன்பின் அடையாளமாக காதலர் தின விழா கொண்டாடப்பட்டது. சாதி, மதம், இனம் உள்ளிட்ட எல்லா வேறுபாடுகளையும் கடந்து &nbsp;மனிதர்களை ஒன்றிணைக்கும் அன் பின் அடையாளமாக காதலர் தின &nbsp;விழா உலக முழுவதும் பிப்.14 ஆம் தேதியன்று கொண்டாடப்படு கிறது. அதன்ஒருபகுதியாக இந்திய &nbsp;ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் &nbsp;சனியன்று கோவை பார்க் வீதியில் இணையர்கள் கேக் வெட்டி கொண் டாடினர். இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் ந. ராஜா தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பாவல், செயலாளர் ஜூல் பிகர் அகமது, மாதர் சங்க மாவட் டத் தலைவர் உஷா தங்கமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். முன்னதாக சாதி மத வேறு பாடுகளை கடந்து வாழ வேண்டும், சாதி மத பேதமற்ற சமுதாயத்தை அமைத்திட வேண்டும், காதல் திரு மணம் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப் பினர். காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில், தந்தை &nbsp;பெரியார் திராவிடர் கழகம் சார்பில் காதலர் தினம் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. இதில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரும், திருநங்கையை 5 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த ஜோடியும் கலந்து கொண்டு &nbsp;கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு அன்பை பரிமாறி னர். இதில், தபெதிக பொதுச்செய லாளர் கு.இராமகிருட்டிணன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram