தோழர் வைத்திலிங்க பூபதி பணி நிறைவு பாராட்டு விழா
31 May 2026, 8:38 pm
<p><strong>தோழர் வைத்திலிங்க பூபதி பணி நிறைவு பாராட்டு விழா</strong></p><p>திண்டுக்கல், மே 31- திண்டுக்கல்லில் தோழர் வைத்தி லிங்க பூபதியின் பணி நிறைவு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, என்.பாண்டி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். திண்டுக்கல் விருதுநகர் நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயீஸ் யூனியன் மாநில துணைத் தலைவர் ஆர். அய்யனார்சாமி தலைமை வகித்தார். திண்டுக்கல் கிளைச் செயலாளர் எம். கிறிஸ்டோபர் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியின் போது, சிபிஎம் வளர்ச்சி நிதிக்காக ரூ.10 ஆயிரத்தை தோழர் வைத்திலிங்க பூபதி, அவரது மனைவி ஜி.சாந்தி மற்றும் மகன் ஏ.வி.அகிலேஷ் ஆகியோர் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரனிடம் வழங்கினர். விழாவில் தமுஎகச தலைவர்கள் வேலாயுதம், வரத.ராஜமாணிக்கம், இரா.ராஜேந்திரன், கவிவாணன், தாமோதரன், பழனிக்குமார், மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.</p>
