தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

24 Feb 2026, 3:55 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

நன்னடத்தை சிறைவாசிகளுக்கு  120 நாட்கள் வரை விடுப்பு வழங்க அனுமதி

சென்னை: தமிழக சிறைகளில் நீண்ட காலமாக தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் மனநலன் மற்றும் மறு வாழ்வை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சிறை விடுப்பு  விதிகளில் புதிய சீர்திருத்தத்தை அமல்படுத்தியுள்ளது. “தமிழ்நாடு சிறைச்சாலைகள் (விடுப்பில் விடுவித்தல்) விதிகள், 2026” என்ற புதிய சட்டத்தின்படி நன்னடத்தை கொண்ட  கைதிகள் ஆண்டுக்கு 120 நாட்கள் வரை குடும்பத்தினருடன் கழிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறைத்துறை இயக்குநர் ஆண்டுக்கு 60 நாட்கள் வரை  விடுப்பு வழங்க அதிகாரம் பெறுவார். விதிவிலக்கான சூழல்களில் அரசு மேலும் 60 நாட்கள் வரை நீட்டிக்கலாம். குறைந்தது 10 ஆண்டு தண்டனை முடித்திருக்க வேண்டும்  என்பதும், சிறையில் திருப்திகரமான நன்னடத்தை இருக்க வேண்டும் என்பதும் தகுதிக்கான முக்கியமான நிபந்த னைகள். பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல்,  தேச பாதுகாப்பு அச்சுறுத்தல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட வர்களுக்கு இந்த சலுகை கிடையாது என அரசு தெளிவு படுத்தியுள்ளது.

‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்’

அதிமுக 3 ஆம் கட்ட வாக்குறுதி அறிவிப்பு  சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாள் விழாவில் பேசிய அதிமுக பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிசாமி 3 ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதி களை அறிவித்தார். அப்போது, அதிமுக ஆட்சிக்கு வந்தால்  ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை யாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு டன் ரூ.1,000, பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,000, 12 ஆம் வகுப்பு வரை படித்து வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.1,000, தெருவோர  வியாபாரிகளின் கூட்டுறவு வங்கிக் கடன் முழு தள்ளுபடி  என பல்வேறு வாக்குறுதிகளையும் அவர் அறிவித்தார்.

ஆளுநர் பதிலளிக்க உத்தரவு

சென்னை: முன்னாள் துணைவேந்தரை சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்து செய்த ஆளுநரின் உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலை. தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு ஆளுநர் பதி லளிக்க உத்தரவிட்டுள்ளது. துணைவேந்தராக இருந்த வேல்ராஜின் சஸ்பெண்ட் உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி  2025 செப்டம்பர் 5 ஆம் தேதி திடீரென ரத்து செய்தார்.

வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2014 ஆம் ஆண்டு மதிமுக பொதுச் செயலாளர் வை கோ தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2024 தடை உத்தரவு அமலில் உள்ளதால் வழக்கு  செல்லத்தக்கது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழகத் தில் நிர்வாக நலன் கருதி  8 மூத்த ஐஏஎஸ் அதி காரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ் நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான அதிகாரப் பூர்வ ஆணையைத் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் வெளி யிட்டுள்ளார். முக்கிய மாற்றங் களாக, பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை கூடுதல் தலை மைச் செயலாளர் ஆர். ஜெயா, சிறப்பு முயற்சி கள் துறைக்கு மாற்றப் பட்டுள்ளார். ஒன்றிய அரசுப் பணியிலிருந்து திரும்பிய சந்திரசேகர் சாகமூரி, சிஎம்டிஏ முதன் மைச் செயல் அலுவல ராகவும், அ. சண்முக சுந்தரம் மாநிலத் தேர்தல்  ஆணையச் செயலாள ராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட ஆட்சியர் களைப் பொறுத்தவரை, காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்த கலைச்செல்வி மோகன் மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் த.  சினேகா நியமிக்கப்பட்டு உள்ளார். செங்கல்பட்டு ஆட்சியராக எஸ். மாலதி  ஹெலன் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியராக கு. ரவிகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த மாற்றங்கள் அதி  முக்கியத்துவம் வாய்ந்த தாகக் கருதப்படு கின்றன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.