முந்தய பக்கம்

பெண் பாலியல் வன்கொலைகள்: வாழ்நாள் சிறைச் சட்டம்தான் தீர்வு

24 May 2026, 10:26 pm
பெண் பாலியல் வன்கொலைகள்: வாழ்நாள் சிறைச் சட்டம்தான் தீர்வு
<p><strong>பெண் பாலியல் வன்கொலைகள்: வாழ்நாள் சிறைச் சட்டம்தான் தீர்வு</strong></p><p>வைகோ வலியுறுத்தல் சென்னை, மே 24- பெண் பாலியல் வன்கொ டுமை குற்றவாளிகளுக்கு மாநில அரசு வாழ்நாள் சிறைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ ஞாயி றன்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பெண் பாலியல் வன்கொடுமை கொலைகள் அடுத்தடுத்து எல்லாருடைய ஆட்சியிலும் நடந்து கொண்டுதான் இருக் கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டு மென்றால், குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிறுத்தப்படும் அந்த கயவர்களுக்கு நீதி மன்றங்கள், பிணை விடுதலை கொடுக்கவே கூடாது. சில நிகழ்வுகளைப் பார்க்கும் போது, பிணை விடுதலையில் வந்த வர்கள்தான் மீண்டும் பெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்கிறார்கள். ஆகவே, நீதி மன்றங்கள் பிணை விடுதலை வழங்கவே கூடாது. இதுபோன்று பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமிகள் உட்பட பெண் களை படுபயங்கரமாக நாசமாக்கி கொலை செய்கிற கொடியவர்களுக்கு, ‘வாழ்நாள் முழு வதும் சிறை’ என்றுதான் தண்டனை இருக்க வேண்டும். ஆயுள் தண்டனை என்று கூறி பத்து ஆண்டுகளில் விடுதலை செய்வதெல் லாம் இருக்கக் கூடாது. எனவே, வாழ்நாள் முழு வதும் சிறை என்ற சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும். அந்தச் சட்டத்தை ஒன்றிய அரசு அங்கீகரிக்க வேண்டும்” என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram