மார்க்சிய தலைவர்களை குறிவைத்து தாக்குவது கண்டனத்திற்குறியது சிதம்பரத்தில் வைகோ பேட்டி
28 May 2026, 11:29 pm
<p><strong>மார்க்சிய தலைவர்களை குறிவைத்து தாக்குவது கண்டனத்திற்குறியது சிதம்பரத்தில் வைகோ பேட்டி</strong></p><p>சிதம்பரம், மே 28 - சிதம்பரத்தில் மதிமுக பொதுச் செய லாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து மார்க்சிய தலைவர்களை குறி வைத்து தாக்குவது வன்மையாக கண்டனத்துக்குறியது என்றார். மேலும், கேரள முன்னாள் முதல்வர் பினராய் விஜயன் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதையும், அதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சித் தலைவர்களை கைது செய்ததையும் வன்மையாக கண்டிக்கிறேன். மாணவர் பருவம் முதல் மார்க்சிய சிந்தனையுடன் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறந்த முதல்வராக செயல்பட்டவர் பினராய் விஜயன். அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் குறிவைத்து கைது செய்வது மிரட்டும் செயலாகும். ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவ தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமை யாக பாதிக்கப்படுகின்றனர். இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேகதாட்டு அணை கட்டும் திட்டத்தை கண்டித்தும், அனுமதி அளிக்க்கூடாது என்று வரும் ஜூன் 2ஆம் தேதி சென்னையில் மதிமுக தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் பி.ஆர். பாண்டியன் தலைமையிலான விவ சாயிகள் அமைப்பு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, மே 17 இயக்கம், ஆதி தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விவசாயத்தை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் வகையில், ஒன்றிய அரசு காட்டுப்பன்றியை விலங்குகள் பாதுகாப்பு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். மேலும், கேரளா-தமிழக எல்லைப் பகுதி யில் உள்ள செண்பகவள்ளி அணையை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி ஜூன் 5 அன்று வாசுதேவநல்லூரில் மதிமுக சார்பில் அறப்போர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்க ளுக்கு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கக் கூடாது. அவர்களுக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை வழங்க வேண்டும். இந்த சந்திப்பின் போது கட்சியின் மாநில பொருளாளர் செந்திலதிபன், மாநில ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பி னர் மோகனசுந்தரம், மாவட்ட செயலாளர் என். ராமலிங்கம் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.</p>
