தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிநீர் பற்றாக்குறை எதிரொலி வைகை ஆற்றில் தண்ணீர் திருட்டு: மோட்டார் இணைப்பு துண்டிப்பு

30 May 2026, 10:10 pm
குடிநீர் பற்றாக்குறை எதிரொலி வைகை ஆற்றில் தண்ணீர் திருட்டு:  மோட்டார் இணைப்பு துண்டிப்பு
<p><strong>குடிநீர் பற்றாக்குறை எதிரொலி வைகை ஆற்றில் தண்ணீர் திருட்டு: மோட்டார் இணைப்பு துண்டிப்பு</strong></p><p>தேனி, மே 30- குடிநீர் பற்றாக்குறை எதி ரொலியாக வைகை ஆற்றில் தண்ணீர் திருட்டை கண்ட றிந்த நீர்வளத்துறை அதி காரிகள் மோட்டார் இணை ப்பை துண்டித்தனர். வைகை அணையிலி ருந்து மதுரை மாநகர், புற நகர், தேனி மாவட்டத்திற்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் வழங்கப்படு கிறது. வைகை நீர்மட்டம் சரிந்து விட்ட நிலையில், முல்லைப்பெரியாறு அணை யில் திறக்கப்படும் தண்ணீர் வைகை அணைக்கு வந்து சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது. அணைக்கு வரும் தண் ணீரை சிலர் மோட்டார் மூலம் விவசாயத்திற்கு பாய்ச்சி வந்தனர். இதனைத் தொடர்ந்து வைகை அணை செயற் பொறியாளர் சேகர் தலை மையில் உதவி பொறியா ளர்கள் சதீஸ், பரதன், மதுரை மாநகரட்சி பொறியாளர் தியாகராஜன் உள்ளிட்ட அதி காரிகள் பல குழுக்களாக சென்று முல்லைப் பெரி யாறு கரையோரம் உள்ள பழனிசெட்டிபட்டி குன்னூர், கருவேல் நாயக்கன்பட்டி, கோட்டைப்பட்டி, அரப்படி தேவன்பட்டி உள்ளிட்ட பகு திகளில் தண்ணீர் திருட்டு நடப்பதை உறுதி செய்த அதி காரிகள் மோட்டார் இணைப்பை துண்டித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.