தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வைகை ஆற்றை விஷமாக்கும் மருத்துவக் கழிவுகள்: தேனூர் மண்டபம் கரையில் குவியும் அபாயக் குப்பை

20 May 2026, 10:23 pm
வைகை ஆற்றை விஷமாக்கும் மருத்துவக் கழிவுகள்: தேனூர் மண்டபம் கரையில் குவியும் அபாயக் குப்பை

வைகை ஆற்றை விஷமாக்கும் மருத்துவக் கழிவுகள்: தேனூர் மண்டபம் கரையில் குவியும் அபாயக் குப்பை

மதுரை, மே 20- மதுரையின் உயிர்நாடியாக கருதப்படும் வைகை ஆறு, தற்போது ஆபத்தான மருத்துவ மற்றும் உயிரியல் கழிவுகள் கொட்டப்படும் திறந்த குப்பை குளமாக மாறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தேனூர் மண்டபம் கரைப் பகுதியில், ஆற்றின் நடுப் பகுதியிலேயே மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் மற்றும் திருமண மண்டபங்களில் இருந்து வெளியேறும் உணவுக் கழிவுகள் மலைபோல் குவித்து கொட்டப் பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து ள்ளது.

மேலும் பயன்படுத்தப்பட்ட ஊசிகள், ரத்தக்கறை படிந்த மருத்துவப் பொருட்கள், கையுறைகள், பிளாஸ்டிக் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட உயிரியல் மருத்துவக் கழிவுகள் எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் இன்றி திறந்த வெளியில் கொட்டப்பட்டு, பின்னர் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் மற்றும் கரும்புகை சூழ்ந்து காணப்படுவதால், அருகில் வசிக்கும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

புகை காரணமாக சுவாசக்கோளாறு, கண் எரிச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், “வைகை ஆற்றில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது மிகப்பெரிய சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதார அச்சுறுத்தலாகும். உயிரியல் கழிவுகளை முறையாக அகற்றாமல் திறந்த வெளியில் எரிப்பது சட்டவிரோதமானது.

இதனால் நிலத்தடி நீர், காற்று மற்றும் ஆற்றுநீர் மாசுபடும் அபாயம் உள்ளது” என்றனர். எ

னவே, வைகை ஆற்றங்கரையில் கொட்டப்படும் மருத்துவ மற்றும் பிற கழிவுகளை உடனடியாக அகற்றுவதுடன், இதற்கு காரணமானவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.