சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
9 Apr 2026, 5:30 am

சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

மானாமதுரை, ஏப்.8- மானாமதுரையில் நடைபெற உள்ள சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிரே உள்ள வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன்-சோமநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாள் சித்திரை திருவிழா, இந்த ஆண்டு வருகிற ஏப். 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கூடுகின்றனர்.

தற்போது வைகை ஆற்றில் நாணல் செடிகள், கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம் சுத்தப்படுத்தும் பணியை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.

நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடைபெறும் இந்த பணிகள், திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான சூழலை உருவாக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.