சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
9 Apr 2026, 5:30 am

சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

மானாமதுரை, ஏப்.8- மானாமதுரையில் நடைபெற உள்ள சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிரே உள்ள வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன்-சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்குகிறது. திருவிழா காலங்களில் வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், ஆற்றில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றும் பணி நடைபெறுகிறது.

நகரமன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடைபெறும் இந்தப் பணிகள், பக்தர்களுக்கு சுத்தமான சூழலை உருவாக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.