வைகை அணை நீர்மட்டம் 33 அடியாக குறைந்தது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
20 Mar 2026, 2:55 pm
<p><strong>வைகை அணை நீர்மட்டம் 33 அடியாக குறைந்தது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்</strong></p>
<p>தேனி, மார்ச் 20- வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால், அணைக்கு வரும் நீர்வரத்து அடி யோடு குறைந்துள்ளது. இத னால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவ தோடு, பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. 71 அடி நீர்மட்டம் கொண்ட வைகை அணை க்கு தற்போதைய நிலையில் வினாடிக்கு வெறும் 87 கன அடி மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ள நிலை யில், தற்போது குடிநீ ருக்காக மட்டும் வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி அணை யின் நீர்மட்டம் 33.33 அடி யாக குறைந்துள்ளது. நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை அறிகுறி இல்லாததா லும், நீர்மட்டம் 33 அடிக்கும் கீழ் சென்று கொண்டிருப்ப தாலும், வரும் காலங்களில் தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வ தில் பெரும் சிரமம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.95 அடியாக உள்ளது .அணை க்கு நீர்வரத்து 116 கன அடி .300 கன அடி நீர் வெளி யேற்றப்படுகிறது.</p>
