வைகை அணை நீர்மட்டம் 21 அடியாக குறைந்தது கேள்விக்குறியாகும் குறுவை சாகுபடி
2 Jun 2026, 9:52 pm

வைகை அணை நீர்மட்டம் 21 அடியாக குறைந்தது கேள்விக்குறியாகும் குறுவை சாகுபடி

ஆண்டிபட்டி, ஜூன் 2- அடுத்த சில வாரங்களில் குறுவை சாகுபடி பருவம் தொடங்கவுள்ள நிலையில், வைகை அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளதால், பாசனத்திற்குத் தேவை யான தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படுமா என்ற கவலையில் மதுரை மாவட்ட விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர்.

நீர்வளத்துறை தரவுகளின்படி,71 அடி முழுக் கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் திங்கட்கிழமை நிலவரப்படி 21.29 அடியாக மட்டுமே உள்ளது. அணை க்கு வினாடிக்கு 96 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

கடந்த மே 29 அன்று பதிவான 20.5 அடியை விட நீர்மட்டம் தற்போது சற்று உயர்ந்து இருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் இதுவே மிகக் குறைந்த அளவாகும்.

தற்போதுள்ள நீர் இருப்பு பாசனத் தேவைகளுக்குப் போதாது என்று நீர்வ ளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.

இதற்கிடையில் முல்லைப் பெரி யாறு அணையின் நீர்மட்டம் திங்கட் கிழமை அன்று 110.8 அடியாகப் பதி வாகியுள்ளது

இருபோக பாசனக் காலத்திற்குத் தண்ணீர் திறக்கப் பட வேண்டுமானால், வைகை, முல்லைப் பெரியாறு அணைகளின் கூட்டு நீர் இருப்பு 4,000 மில்லி யன் கன அடிக்கு மேல் இருக்க வேண்டும்.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தால் மட்டுமே நீர் இருப்பு தேவையான அளவிற்கு உயரும்.

தற்போது இரண்டு அணைகளிலும் உள்ள நீர் இருப்பு தேவையான அளவை விட மிகக் குறைவாக இருப்பதால், உட னடியாக பாசனக் கால்வாய்களைத் திறப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

வழக்கமாக, மதுரை மாவட்டத்தில் 9,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்கு ஆதரவாக ஜூன் மாத பாதியில் பெரியாறு பிரதான கால்வாய் வழியாகத் தண்ணீர் திறந்து விடப்படும். தண்ணீர் திறப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அது சாகுபடிக்கான ஆரம்பகட்டப் பணிகள் மற்றும் விதைப்புப் பணிகளைப் பாதிக்கும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.