2 மாதத்திற்குள் வைகை அணை தூர்வாரும் பணி தொடங்கும்! அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தகவல்
13 Jun 2026, 11:10 pm

2 மாதத்திற்குள் வைகை அணை தூர்வாரும் பணி தொடங்கும்! அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தகவல்

தேனி, ஜூன் 13 - வைகை அணையைத் தூர்வாரும் பணி 2 மாதங்களுக்குள் முழுவீச்சில் தொடங்கும் என்று எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.

சனிக்கிழமை (ஜூன் 13) தேனி மாவட்டத் திற்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்ட அமைச் சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், வைகை அணைப்பகுதியை நேரில் ஆய்வு செய் தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறு கையில், “வைகை அணையில் சுமார் 15 அடி வரை தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றித் தூர்வாரும் பணிகளை மேற்கொள் வதற்கான ஆய்வு அறிக்கைகள் தயாரிக்கப் பட்டு வருகின்றன.

இந்தப் பணி மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளதுடன், முழுமையாக நிறைவேற சுமார் 9 ஆண்டு கள் ஆகும்.

இது தொடர்பாக ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் அனுமதி பெறுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அனுமதி கிடைத்தவுடன், இன்னும் 2 மாதங்களுக் குள் தூர்வாரும் பணி முழுவீச்சில் தொடங்கப் படும். மேலும், விவசாயிகள் தங்கள் தேவை களுக்காக வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால், வணிக நோக்கத்திற் காகவோ அல்லது சட்டவிரோதமாக கடத்த முயற்சித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அ

தேபோல், ஆண்டிபட்டி புறவழிச்சாலைத் திட்டத்தை செயல் படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் அமைச்சர் தலைமையில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது.