விளையாட்டு
17 minutes before

விளையாட்டு

53 பந்துகள் ; 28 சிக்ஸர் ; 7 போர் - 203 ரன்கள் பந்துவீச்சாளர்களுக்கு புதிய அடிப்படையை வலியுறுத்தும் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம்

ஆசிய அளவிலான ரைசிங் ஒருநாள் கோப்பை கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்று வருகிறது. முதல் தர போட்டியாக நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங், நேபாளம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

துவம்சம்

இந்நிலையில், செவ்வாய்க்கிழ மை நடைபெற்ற ‘குரூப் பி’ பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. இது சாதாரண விசயமல்ல. ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் முக்கிய வீரர்களின் பந்துவீச்சை சமாளித்தும், கடினமாக போராடியும், ஒருவரின் சதத்தின் உதவியால் (ஹர்பிரீத் சிங் - 130 ரன்கள்) ஐக்கிய அரபு அமீரகம் 249 ரன்கள் சேர்த்துள்ளது. இது அவர்களுக்கு ஒரு முக்கிய பெருமைதான். ஆனால் இந்திய அணியின் 15 வயது இளம் வீரர் ஐக்கிய அரபு அமீரக கடின உழைப்பை வெறும் 14.2 ஓவர்களில் துவம்சம் செய்துவிட்டார்.

நடுவர்களுக்கு கை வலி

“கொஞ்ச நாட்களுக்கு இந்தி யாவிற்கு எதிராக நாங்கள் பந்து வீசவே மாட்டோம்” என்று கூறும் அளவிற்கு சூர்யவன்ஷி தனது இரட்டை சதத்தின் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் பந்துவீச்சாளர்களை புரட்டியெடுத்துள்ளார். “தம்பி நீ ஒருநாள் போட்டியில் விளை யாடுகிறாய்” என்று அவரிடம் யாரும் கூறவில்லை என்பது போல, அதிரடியில் ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யவன்ஷி 53 பந்துகளில் 28 சிக்ஸர், 7 போர் என 203 ரன்கள் விளாசி, 40 ஓவர்களில் (தோராயமாக ரன் ரேட் அடிப்படையில் - ஆனால் 50 ஓவர் போட்டி) வெற்றி பெற வேண்டிய இலக்கை வெறும் 14.2 ஒவர்களில் (3 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள்) இந்தியாவை எட்ட வைத்து, கிரிக்கெட் உலகை அலறவைத்துள்ளார்.

ஓவருக்கு 17.7 ரன்கள் வீதம் இந்திய அணி இமாலய வெற்றியை ருசித்துள்ளது. பந்துவீசிய ஐக்கிய அரபு அமீரக பந்துவீச்சாளர்கள் யாரும் 10 எக்கனாமிக்குள் இல்லை.

சூர்யவன்ஷிக்காக சிக்ஸ், போருக்காக கைகளை உயர்த்திய நடுவர்களுக்கு கை வலி வந்து விடும் என்று கூட கூறலாம். குறுகியகாலத்தில் அதிகமாக கையை தூக்கியதால் சோர்வுடன் காணப்பட்டனர். முதல் தர போட்டியில் சூர்யவன்ஷியின் மாபெரும் அதிரடி ஆட்டம் நிகழ்ந்ததால், உலக சாதனை அம்சமாகஉருவெடுக்கவில்லை. எனினும் சமூக வலைத்தளங்களில் அவரது சிக்ஸர் மழை கடந்த 30 மணிநேரமாகவைரலாகி வருகிறது.

9 வகை பந்துவீச்சு

இந்நிலையில், சூர்யவன்ஷியின் அதிரடி பந்துவீச்சாளர்களுக்கு புதிய அடிப்படையை வலியுறுத்துகிறது. தற்போதைய கிரிக்கெட் உலகில் 1. யார்க்கர் (பேட்ஸ்மேனின் காலுக்கு கீழே), 2. பவுன்சர் (தோள்பட்டை அல்லது தலைக்கு மேலே எகிறிச் செல்லும்), 3. நக்கிள் பால் (விரல் நுனிகளால் பிடித்து, வேகத்தைக் குறைத்து பேட்ஸ்மேனை ஏமாற்றி வீசப்படும் பந்து), 4. ரிவர்ஸ் ஸ்விங் (பழைய பந்தில் காற்றின் திசையைப் பயன்படுத்தி எதிர்பாராத பக்கத்தில் பந்தைத் திருப்புவது), 5. கட்டர்ஸ் (வேகப்பந்து வீச்சாளர் விரல்களால் பந்தைத் திருப்பி சுழல்) உள்ளிட்ட வேகப்பந்துவீச்சுகளும், 6. கூக்ளி (லெக்-ஸ்பின் வீசுவது போல பாவனை செய்து, ஆப்-ஸ்பின் திசையில் பந்தைத் திருப்புவது), 7. தூஸ்ரா (ஆப்-ஸ்பின் வீசுவது போலக் காட்டி, லெக்-ஸ்பின் திசையில் பந்தைத் திருப்புவது), 8. கேரம் பால் (நடுவிரலால் பந்தைச் சுண்டி வீசப்படும் நவீன சுழற்பந்து வகை), 9. ஆர்ம் பால் (சுழலாமல் நேராக வேகமாகச் செல்லும் பந்து) உள்ளிட்ட சுழற்பந்துவீச்சு ஒன்பது முக்கிய வகைகளும் உள்ளன.

ஆனால் தற்போதைய நவீன கால அல்லது சூர்யவன்ஷி போன்ற அதிரடி வீரர்களுக்கு இந்த 9 வகை பந்துவீச்சுகள் அனைத்து நேரத்திலும் எடுபடாது. புதிய அடிப்படை உருவாக்கினால் மட்டுமே சமாளிக்க முடியும். இல்லையென்றால் தவறு, சொதப்பல் மூலமாகவே பந்து வீச்சாளர்கள் சூர்யவன்ஷி போன்ற அதிரடி வீரர்களை பெவிலியனுக்கு அனுப்பும் சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.