சாதி, மத பேதமற்ற சமத்துவ தீபாவளி:கோவை வடசித்தூரில் விடிய விடிய களைகட்டிய ‘மயிலம்’ கொண்டாட்டம்!
23 minutes before

சாதி, மத பேதமற்ற சமத்துவ தீபாவளி:கோவை வடசித்தூரில் விடிய விடிய களைகட்டிய ‘மயிலம்’ கொண்டாட்டம்!

கோவை, நவ. 10 –கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில், தீபாவளிக்கு அடுத்த நாள் சாதி, மத எல்லைகளைக் கடந்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் பாரம்பரிய ‘மயிலம் சமத்துவ தீபாவளி’ விழா மிகுந்த எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் நடைபெற்றது.

தீபாவளி பண்டிகையை அவரவர் வீடுகளில் கொண்டாடும் வழக்கத்திற்கு மாறாக, வடசித்தூர் கிராம மக்கள் மறுநாளன்று ஊர் கூடி ஒரே குடும்பமாய்ப் பொதுவெளியில் கொண்டாடுவதைப் பல தலைமுறைகளாக மரபாகக் கடைப்பிடித்து வருகின்றனர். சமூகப் பாகுபாடுகளைத் தகர்த்து, உழைக்கும் மக்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த விழாவில், ஊரின் அனைத்துப் பகுதி மக்களும் ஒரே இடத்தில் கூடி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

கிராமியக் கலைகள்

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ‘மயிலம்’ உருவத்தை முன்னிறுத்தி, தாரை தப்பட்டை முழங்க கிராமிய இசைக்கலைஞர்கள் முழக்கமிட ஊர்வலம் விமரிசையாகத் தொடங்கியது. உழைக்கும் மக்களின் பாரம்பரியக் கலைகளான ஒயிலாட்டம், தேவராட்டம் மற்றும் மயிலாட்டத்தை இளைஞர்களும் பெரியவர்களும் ஒன்றிணைந்து விடிய விடிய ஆடி அசத்தினர்.வாழ்வாதாரத்திற்காக வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்த பூர்வகுடி மக்கள் பலரும் இந்த சமத்துவ சங்கமத்திற்காகச் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து விழாவில் பங்கேற்றனர்.

விழாவின் நிறைவாக, எந்தவிதப் பிரிவினையுமின்றி அனைவரும் ஒன்றாக அமர்ந்து சமபந்தி விருந்தில் கலந்துகொண்டு உணவருந்தினர். சமத்துவத்தையும் சமூக ஒற்றுமையையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வடசித்தூர் கிராம பொதுமக்கள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.