‘தீக்கதிர்’ செய்தி எதிரொலி: வடமூர் கிராமத்தில் தாழ்வாக இருந்த மின்கம்பிகள் சீரமைப்பு
26 Jun 2026, 12:32 am
<p><strong>‘தீக்கதிர்’ செய்தி எதிரொலி: வடமூர் கிராமத்தில் தாழ்வாக இருந்த மின்கம்பிகள் சீரமைப்பு</strong> </p><p>காட்டுமன்னார்கோவில், ஜூன் 25- காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வடமூர் கிரா மத்தில், மிகவும் தாழ்வாகக் கட்டப்பட்டிருந்த மின்கம்பி களைச் சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர். வடமூர் கிராமத்தில் விவ சாய நிலங்கள் மற்றும் பொது மக்கள் நடமாடும் பகுதிகளில் மின்கம்பிகள் தலை தட்டும் அளவிற்கு மிகவும் தாழ்வாக இருந்தன. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் குறித்து விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக அச்சத்தில் இருந்தனர். இது குறித்த செய்தி படத்துடன் ‘தீக்கதிர்’ நாளிதழில் வியாழனன்று (ஜூன் 25) வெளியானது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றது. இதன் உடனடி விளைவாக, மின்வாரிய ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, அந்த கிராமத்திற்கு நேரில் சென்று தாழ்வாக இருந்த மின்கம்பிகளை அகற்றி, அவற்றை உயர்த்திப் பொருத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். வரவேற்பு இந்தப் பணிகள் முழுமையடைய இரண்டு நாட்கள் ஆகும் என்று மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, விபத்து அபாயத்தைத் தடுக்க நட வடிக்கை எடுத்தமைக்கு அப்பகுதி மக்கள் மற்றும் விவ சாயிகள் தங்களது மகிழ்ச்சியையும் வரவேற்பையும் தெரி வித்துள்ளனர்.</p>
