வடம்பூண்டி பழங்குடி இருளர் பகுதிக்கு சிமெண்ட் சாலை சிபிஎம் தொடர் முயற்சிக்கு வெற்றி
2 hours before

வடம்பூண்டி பழங்குடி இருளர் பகுதிக்கு சிமெண்ட் சாலை சிபிஎம் தொடர் முயற்சிக்கு வெற்றி

விழுப்புரம், ஆக.20-விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்திற்கு உட்பட்ட வடம்பூண்டி பழங்குடி இருளர் பகுதிக்கு சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது.

இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி.

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் ஒன்றியம், வடம்பூண்டி (பெரப்பேரி) கிராமத்தின் முகப்புப் பகுதியில் நீண்டகாலமாக வசித்து வந்த பழங்குடி இருளர் குடும்பங்களை, கடந்த 2017ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை வழங்குவதாகக் கூறி அப்பகுதியிலிருந்து அகற்றி, கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் உள்ள குளக்கரையோரப் பகுதியில் குடியமர்த்தப்பட்டனர்.

அரசின் இலவச வீட்டுமனை மற்றும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அங்கு வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியேறினர்.

ஆனால், வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் அந்தப் பகுதிக்கு முறையான சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

இதனால் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.

குறிப்பாக, மழைக்காலங்களில் சாலை வசதியின்றி அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். அவசர மருத்துவத் தேவைகள் ஏற்பட்டாலும், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் செல்வதற்கும் சிரமமான சூழல் நிலவி வந்தது.

மேலும், அப்பகுதி மக்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதியும் நீண்டகாலமாக இல்லாத நிலை இருந்து வந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இரவு நேரங்களில் மண்ணெண்ணை விளக்கின் வெளிச்சத்தில் படிக்கும் அவலநிலை ஏற்பட்டது.

இதுகுறித்து பலமுறை அதிகாரி களிடம் மனுக்கள் அளிக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்தப் பிரச்சனைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கவனத்தில் எடுத்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும், நேரடியாக வலியுறுத்தியும் வந்தது. மக்களின் அடிப்படை உரிமையான சாலை வசதியை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது அப்பகுதி யில் முதல் கட்டமாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது

இதன் மூலம் பல ஆண்டுகளாக சாலை வசதியின்றி அவதிப்பட்டு வந்த பழங்குடி இருளர் மக்களின் நீண்டகால கோரிக்கையில் ஒரு முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சி யால் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி கள் அப்பகுதிக்கு கிடைத்துள்ள நிலை யில், தற்போது சாலை வசதியும் ஏற்படுத்தப்பட்டிருப்பது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இது சிபிஎம் தொடர்ச்சியான மக்கள் பணிக்கும், பிரச்சனைகளை அதிகாரி களின் கவனத்திற்கு தொடர்ந்து கொண்டு சென்றதற்கும் கிடைத்துள்ள முதல் கட்ட வெற்றியாகும்.

மக்களின் பிரச்சனைகளை தொடர்ந்து முன்னெடுத்து, அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக சிபிஎம் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று திண்டிவனம் வட்ட குழு சார்பில் வட்ட செயலாளர் ஏ.கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.