வடலூர் சத்திய ஞான சபையை முற்றுகையிட்ட கிராம மக்கள்
5 Oct 2026, 12:40 am
<p><strong>வடலூர் சத்திய ஞான சபையை முற்றுகையிட்ட கிராம மக்கள்</strong></p><p>கடலூர்,அக்.4-வள்ளலார் அவதார தின விழா அழைப்பிதழில், பார்வதிபுரம் கிராம மக்கள் நிதி திரட்டி அமைத்த புதியகொடிக்கம்பத்துக்கு ஊர் பொதுமக்களின் பெயரை குறிப்பிடாமல் தனிநபர் ஒருவரின் பெயர் உபயதாரராக இடம்பெற்றதாகக் கூறி, பார்வதிபுரம் கிராம மக்கள் வடலூர்சத்திய ஞான சபையை முற்றுகையிட்டனர்.வடலூர் அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் நாளை (அக்.5.) வள்ளலார் அவதார தின விழா நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழில் ஏற்பட்ட குளறுபடியைத் தொடர்ந்து, உதவி ஆணையர் மற்றும் பொறுப்பு அலுவலரிடம் கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர்.</p><p>தகவலறிந்து வந்த வடலூர் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள்கொண்டுவர முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்புஏற்பட்டது.</p>
