தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வடக்கனந்தல் அரசுப்பள்ளி வளாகத்தில் மண்டிக்கிடக்கும் புதர்: மாணவர்கள் அச்சம்

5 Jun 2026, 3:17 am
வடக்கனந்தல் அரசுப்பள்ளி வளாகத்தில் மண்டிக்கிடக்கும் புதர்: மாணவர்கள் அச்சம்
<p><strong>வடக்கனந்தல் அரசுப்பள்ளி வளாகத்தில் மண்டிக்கிடக்கும் புதர்: மாணவர்கள் அச்சம்</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூன் 4 - கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கனந்தல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே புல், பூண்டு கள் அடர்ந்து புதர் போல் வளர்ந்து கிடப்ப தால், மாணவர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. பள்ளி வளா கத்தை முறையாகப் பராமரித்துச் சுத்தம் செய்யாததன் காரணமாக இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி நேரம் முடிந்த பிறகு, மாணவர்கள் இந்த வளாகத்தில் விளையாடும் போது, அடர்ந்த புதருக்குள் மறைந்திருக்கும் விஷப்பூச்சிகள் கடித்து விடும் அபாயமும் உள்ளது. இது மாணவர்களின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒரு நிலை யாக மாறியுள்ளதாகப் பெற்றோர்கள் கடும் அச்சம் தெரிவிக்கின்றனர். பள்ளி என்பது குழந்தைகளுக்குப் பாது காப்பான இடமாக இருக்க வேண்டும் என்றும், ஆனால் இங்கே மாணவர்கள் அச்சத்துடனேயே விளையாடும் நிலை உள்ளதாகவும் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாவட்டக் கல்வித்துறை உடன டியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, பள்ளி வளாகத்தைச் சுத்தப்படுத்தி, புல் மற்றும் புதர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.​​​​​​​</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.