சிதம்பரத்தில் வடை திருவிழா
7 Dec 2025, 3:52 pm
<p><strong>சிதம்பரத்தில் வடை திருவிழா</strong></p>
<p>சிதம்பரம், டிச.7- கடலூர் மாவட்டம், சிதம்பரம் தெற்கு வீதியில் கடந்த 70-ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீனிவாச ஐயர் என்பவர் தெருவோரத்தில் தள்ளுவண்டியில் வடை சுட்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது அவரது கடையில் விற்பனை செய்யப்படும் வடையை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் காத்திருந்து வடையை வாங்கி சென்றுள்ளனர். அப்படி வடையை விற்று வளர்ந்த கடை இன்று சண்முகவிலாஸ் என்ற பெரிய இனிப்பு மற்றும் பேக்கரி கடை யாக வளர்ந்துள்ளது. இவர்களின் இனிப்பு வகைகள் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 7 ஆண்டுக்கு முன்பு இந்த கடையை நிறுவிய ஸ்ரீனிவாச ஐயர் டிசம்பர் முதல் சனிக்கிழமை அன்று உயிரிழந்தார். அவரது நினைவை போற்றும் வகையில்ஒவ்வொரு ஆண்டும் வடை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் முதல் சனிக்கிழமை 7 வது ஆண்டு நினைவு நாளையொட்டி வடை திருவிழா கடையின் முன்பு நடைபெற்றது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கடையின் உரிமையாளர் கணேஷ் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு இலவசமாக 8 ஆயிரம் வடை வழங்கினர். இதில் ஒருவர் எத்தனை வடை வேண்டு மானாலும் அதே இடத்தில் சாப்பிடலாம் ஆனால் பார்சல் எடுத்து செல்ல அனுமதி இல்லை. இந்த வடையை கடை யில் மற்ற நாட்களில் ஒரு வடை ரூ 8-க்கு விற்பனை செய்கிறார்கள். இதனையறிந்த வர்த்தக சங்கத்தினர் மற்றும் வணிகர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடையின் உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.</p>
