தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாச்சாத்தி கிராமத்தில் ‘வாச்சாத்தி ஆவணப்படம்’ திடையிடல்

1 Mar 2026, 5:56 pm
வாச்சாத்தி கிராமத்தில் ‘வாச்சாத்தி ஆவணப்படம்’ திடையிடல்
<p><strong>வாச்சாத்தி கிராமத்தில் &lsquo;வாச்சாத்தி ஆவணப்படம்&rsquo; திடையிடல்</strong></p> <p>தருமபுரி, மார்ச் 1- 1992 ஆம் ஆண்டு வாச்சாத்தி கிராமத்தில் நடைபெற்ற கொடூர சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட ஆவணப்படம், வாச்சாத்தி கிராமத் தில் சனியன்று திரையிடப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிர ெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட வாச்சாத்தி கிராமத்தில் கடந்த 1992 &nbsp;ஆம் ஆண்டு ஜூன் 20, 21, 22 ஆகிய &nbsp;தேதிகளில் வனத்துறையினர், காவல்துறை மற்றும் வருவாய்த் துறையை சேர்ந்த 269 நபர்கள், &nbsp;அந்த கிராமத்தையே சீரழித்து, வீடு களை உடைத்து சேதப்படுத்தினர். &nbsp;வீடுகளிலிருந்து பாத்திரங்களை யும், உணவு தானியங்களையும் உண்ண முடியாத வகையில் சேதப் படுத்தினர். மேலும், 18 இளம் பெண் களை கூட்டு பாலியல் வன்கொடுக் குள்ளாக்கினர். இந்த அநீதிக்கும், பாதிப்புகளுக்கும் நீதிகேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மும் நீண்ட நெடிய களப்போராட்டத் தையும், சட்டப்போராட்டத்தையும் மேற்கொண்டன. வழக்கின் இறுதி யில், தருமபுரி மாவட்ட அமர்வு &nbsp;நீதிமன்றம் வனத்துறை காவல் துறை மற்றும் வருவாய்த் துறையை சேர்ந்த 269 பேரும் குற்ற வாளிகள் என வரலாற்று தீர்ப்பு வழங்கியது. மேலும், சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப் பட்டது போல், வன்கொடுமைக் குள்ளாக்கப்பட்ட 18 பெண்களுக் கும் தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்களின் வாரி சுதாரர்களுக்கு தகுதியுள்ள 18 நபர் களுக்கு வருவாய்த்துறை மற்றும் &nbsp;ஆதிதிராவிட நலத்துறை அலுவல கங்களில் பணியாற்றிட அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணை கள் வழங்கி பணியாற்றி வருகின்ற னர். இந்நிலையில், நீண்ட நெடிய போராட்டத்தில் மனத்துணிச்சலுடன் நின்ற வாச்சாத்தி கிராம பெண்கள் &nbsp;மற்றும் 31 ஆண்டு காலம் நீதி கேட்டு &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மலைவாழ் மக்கள் சங்கத்தின் போராட்டங்கள் குறித்து &lsquo;காம்ரேட் &nbsp;டாக்கீஸ்&rsquo; குழுவினர் ஆவணப் படத்தை இயக்கினர். இந்த ஆவ ணப்படத்தை கடந்த சில தினங்க ளுக்கு முன் சென்னையில் திரைக் கலைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி &nbsp;மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் பங்கேற்று வெளியிட்ட னர். &nbsp;இந்நிலையில், அந்த ஆவணப் படம் வாச்சாத்தி கிராமத்தில் சனி யன்று திரையிடப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே. என்.மல்லையன் தலைமை வகித் தார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், &nbsp;மாவட்டச் செயலாளர் இரா.சிசு பாலன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஆர்.மல்லிகா, தி.வ.தனு சன், ஒன்றியச் செயலாளர் பி.குமார் &nbsp;உட்பட பலர் சிறப்புரையாற்றினர். முடிவில், ஆவணப்படத்தை இயக் கிய &lsquo;காம்ரேட் டாக்கீஸ்&rsquo; குழுவின ருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.