வாய்ப்பு வாசல்
19 Nov 2025, 3:33 pm

ரயில்வேயில் காலிப்பணியிடங்கள் - 2569

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் இந்திய ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங் களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. மொத்தம் 2569 பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். கல்வித்தகுதி – ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர் மற்றும் அசிஸ்டண்ட் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பொறியியலில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான பாடப் பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் மூன்று வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு - ஜனவரி 1, 2025 அன்று குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 33 ஆகும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்ச்சி வழங்கப்படும். தேர்வு முறை - எழுத்து தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும். அதன் பின் எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ்கள் சரிபார்த்தல் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைனில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வானது இரண்டு கட்டங்களாக நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் - இதர பிரிவினர்களுக்கு ரூ.500 மற்றும் எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள்(SC/ST/PWD) பிரிவினர்களுக்கு ரூ.250 செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற www.indianrailways.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பம் நிரப்புவதற்குக் கடைசித் தேதி நவம்பர் 30, 2025 ஆகும்.

பஞ்சாப் வங்கியில் காலியிடங்கள் (750)

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் LOCAL BANK OFFICER (LBO) பணிக்குத் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஜூலை 1, 2025 தேதியின்படி குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியிருக்க வேண்டும் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்ச்சி தரப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் அவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இது ஆன்லைன் முறையில் நடத்தப்படும். இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களுக்கு www.bnb.bank.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்குக் கடைசித்தேதி நவம்பர் 23, 2025 ஆகும்.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் அப்ரண்டீஸ் - 2700

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் பட்டதாரிகளுக்கு ஒரு வருட தொழில் முனைவோர்(Apprentice) பயிற்சி ரூ.15,000 உதவித்தொகையுடன் வழங்கப்பட உள்ளது. இதற்கான வயது குறைந்தபட்சம் 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது அசல் சான்றுகளை பரிசோதனைக்காக சமர்ப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களுக்கு www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்குக் கடைசித்தேதி டிசம்பர் 12, 2025 ஆகும்.

மத்தியப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு - 14,967

ஒன்றிய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகி யுள்ளது. மொத்தமாக 14 ஆயிரத்து 967 பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். கேந்திரிய வித்யாலயா - 9,126 பணியிடங்கள் நவோதயா - 5, 841 பணியிடங்கள் இவற்றில் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், நூலகர் ஆகிய பணியிடங்களின் எண்ணிக்கை 13, 008 ஆகும். எஞ்சிய 1, 959 பணியிடங்கள் உதவி ஆணையர், நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், உதவிப் பிரிவு அலுவலர், நிர்வாகப் பணியாளர், நிதி அலுவலர், பொறியாளர், சுருக்கெழுத்தர் ஆகியவற்றிற்கானவை ஆகும். தேர்வு முறை - எழுத்துத் தேர்வு மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இந்தத் தேர்வு நடத்தப்படவுள்ளது. தேர்வுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும். நாடு முழுவதும் புதிதாக 57 பள்ளிகளைத் திறக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளதால், கூடுதல் வேலைவாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாநில வாரியான காலிப்பணியிடங்கள், எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், விண்ணப்ப இணைப்பு ஆகியவை உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு www.kvsangathan.nic.in அல்லது www.cbse.nic.in ஆகிய இணைதளங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி டிசம்பர் 4, 2025 ஆகும்.