தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊரக வேலைவாய்ப்பைச் சீர்குலைக்காதே வி.தொ.ச கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

28 Dec 2025, 5:05 pm
ஊரக வேலைவாய்ப்பைச் சீர்குலைக்காதே  வி.தொ.ச கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு வலியுறுத்தல்
<p><strong>ஊரக வேலைவாய்ப்பைச் சீர்குலைக்காதே &nbsp;வி.தொ.ச கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு வலியுறுத்தல்</strong></p> <p>கிருஷ்ணகிரி, டிச. 28- &nbsp;அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட நான்கா வது மாநாடு காவேரிப்பட்டணத்தில் நடைபெற்றது. மூத்த தோழர் வெங்கடாசலம் கொடியேற்றினார். உஷா, வெங்கடாசலம் தலைமை தாங்கினர். வேலு அஞ்சலி தீர்மானம் வாசித்தார். ஒருங்கிணைப்புக் குழு தலைவர் இரா. லெனின் வரவேற்றார். மாநிலச் செயலாளர் எம். முத்து தொடக்க உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் கே. செல்வராசு வேலை அறிக்கை வரவு செலவு சமர்ப்பித்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.கே. நஞ்சுண்டன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், மாதர் சங்க முன்னாள் செயலாளர் ஜேம்ஸா &nbsp;ஆஞ்சலா மேரி, சிஐடியு தூய்மைப் பணி யாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் டி. சீனி வாசன் வாழ்த்திப் பேசினர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒன்றிய அரசு &lsquo;விபி ஜிராம்ஜி&rsquo; எனப் பெயர் மாற்றியதைக் கைவிட வேண்டும்; மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை வன்மையாகக் கண்டிக் கிறோம். 100 நாள் வேலையை 200 நாட்களாக மாற்றி ஊதியத்தை 600 ரூபாயாக உயர்த்த வேண்டும். வீடு இல்லாத விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவச வீடு கட்டித் தர வேண்டும். புறம் போக்கில் வீடு கட்டியுள்ள விவசாயத் தொழி லாளர்களுக்குப் பட்டா வழங்கிட வேண்டும். தீண்டாமை, சாதியக் கொடுமைகளுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு சிறப்புச் சட்டம் &nbsp;இயற்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 60 வயது கடந்த விவசாயத் தொழிலாளர் களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் மாத ஓய்வூதியம் 3000 வழங்கிட வேண்டும். கிருஷ்ணகிரியில் மாங்கூழ் தொழிற்சாலை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 17 பேர் கொண்ட மாவட்டக் குழுவில் தலைவர் லெனின், செயலாளர் கே. செல்வ ராசு, பொருளாளராகக் கே. மாது ஆகியோர் ேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகளை அறி முகம் செய்து மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் நிறைவுரையாற்றினார். மாது நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.