தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பணி நிறைவுபெற்ற வி.சாமிநாதனுக்கு சிபிஎம், சிஐடியு தலைவர்கள் பாராட்டு

8 Jul 2026, 1:29 am
பணி நிறைவுபெற்ற வி.சாமிநாதனுக்கு சிபிஎம்,  சிஐடியு தலைவர்கள் பாராட்டு
<p><strong>பணி நிறைவுபெற்ற வி.சாமிநாதனுக்கு சிபிஎம், சிஐடியு தலைவர்கள் பாராட்டு </strong> </p><p>உளுந்தூர்பேட்டை, ஜூலை 7- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சிஐடியு மண்டல செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினருமான வி.சாமிநாதன், அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இதனையொட்டி, உளுந்தூர்பேட்டையில் உள்ள சிபிஎம் நகர அலுவலகத்தில் அவருக்குப் பாராட்டு மற்றும் உபசரிப்பு விழா நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆர்.இ.டபிள்யூ.ஏ. மாநில துணைத்தலைவர் ஜி.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்த விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஆனந்தன், டி. ஏழுமலை, எம்.கே. பூவராகன், எம். செந்தில், இ. அலமேலு, ஜே. ஜெயக்குமார், வி. ரகுராமன், எம்.கே. பழனி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், இடைக்குழு செயலாளர்கள் பி. ஸ்டாலின், வேலா. பாலகிருஷ்ணன், கே. ஆனந்தராஜ் மற்றும் பல்வேறு வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள், சிஐடியு நிர்வாகிகள் ஏ. வீராசாமி, கே. சீனுவாசன், எம். ராஜேந்திரன், எஸ். சேகர் உள்ளிட்டோரும் பங்கேற்றுத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.மேலும், உளுந்தூர்பேட்டை சன் டிவி செய்தியாளர் ரமேஷ்பாபு, வெளிச்சம் தொலைக்காட்சி ஆதி சுரேஷ், புதிய தலைமுறை ஆறுமுகம், உள்ளிட்ட செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.