தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்தின் வி.மோகனா உட்பட 5 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்!

1 Jun 2026, 8:48 pm
தமிழகத்தின் வி.மோகனா உட்பட  5 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்!

தமிழகத்தின் வி.மோகனா உட்பட 5 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்!

புதுதில்லி, ஜூன் 1 - தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பெண் வழக்கறிஞர் வி. மோகனா உள்பட 5 பேர், உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்ற கொலீஜியம் மற்றும் ஒன்றிய சட்டத்துறை அமைச்சகத்தின் பரிந்து ரையின் அடிப்படையில், குடியரசுத் தலை வர் திரவுபதி முர்மு, இந்த நியமனங் களுக்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவி சச்தேவா, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அருண் பல்லி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர். வி. மோகனாவைப் பொறுத்தவரை, வழக்கறிஞராக பணியாற்றிவரும் நிலை யில், நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர்

. இவ்வாறு நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நிய மிக்கப்பட்ட இரண்டாவது பெண் வழக்கறி ஞர் என்ற வி. மோகனா ஆவார். உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே பி.வி.நாகரத்னா நீதிபதியாக இருக்கும் நிலை யில், வி. மோகனாவின் நியமனம் மூலம் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், உச்சநீதி மன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை யும் 37 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.ஏ. எல்எல்பி பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்ட 1983-ஆம் ஆண்டு, கோயம்புத்தூர் சட்டக் கல்லூரி யில் சேர்ந்து பட்டம் பெற்ற வி. மோகனா, பஞ்சபாகேசன் அலுவலகத்தில் இளநிலை வழக்கறிஞராகவும், பின்னர் தில்லியில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இந்து மல்கோத்ரா, மூத்த வழக்கறிஞர் வைத்திய நாதன் ஆகியோருடன் பணியாற்றினார். உச்சநீதிமன்றம், தில்லி உயர்நீதிமன்றம், தேசிய நுகர்வோர் ஆணையத்திலும் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.

முன்னாள் ஒன்றிய அமைச்சர்களும், மூத்த வழக்கறிஞர்களுமான கபில் சிபல், ப. சிதம்பரம், அருண் ஜெட்லி, மூத்த வழக்கறிஞரும், ஒன்றிய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான கே.கே. வேணு கோபால், மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜூனா ஆகியோருடனும் வி. மோகனா பணியாற்றியுள்ளார்.

அவர், 2031-ஆம் ஆண்டு ஜூன் வரை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.