நூற்றாண்டில் நுழைந்த செம்படையின் மூத்த தோழர் வி.கே.பழனி
9 Jan 2026, 3:41 pm
<p><strong>நூற்றாண்டில் நுழைந்த செம்படையின் மூத்த தோழர் வி.கே.பழனி</strong></p>
<p>இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் 105 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இந்த எழுச்சிமிகு காலத்தில், மதுரையின் வீரமண்ணான பழங்காநத்தத்தில் மற்றுமொரு வரலாற்று நிகழ்வு அரங்கேறியுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த போராளி, தோழர் வி.கே. பழனி அவர்கள், ஜனவரி 7-ஆம் தேதி தனது வாழ்வின் 100-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்! உடலால் வாலிபம்... உள்ளத்தால் கொள்கை! இளமைப் பருவத்திலேயே செங்கொடி யின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தோழர், “அறிவுள்ள இளைஞர்கள் ஆரோக்கிய மாக வளர வேண்டும்” என்ற தீர்க்கதரி சனத்தோடு, சுமார் 68 ஆண்டுகளுக்கு முன்பே “புதுயுக வாலிபர் திரேக பயிற்சி சாலை” என்ற அமைப்பை உருவாக்கி னார். வெறும் அமைப்போடு நிற்காமல், தனது சொந்த முயற்சியால் 26 சென்ட் நிலத்தை வாங்கி, அதை டிரஸ்டாக மாற்றி இன்றும் தடையின்றி இயங்கச் செய்து வருவது, அவரது சமூக அர்ப்பணிப்புக்குச் சான்றாக நிற்கிறது. மக்கள் பணியில் மகத்தான முத்திரை மாடக்குளம் பேரூராட்சியின் துணைத் தலைவராகப் பணியாற்றியபோது, பைக்காரா பகுதிக்கு “முத்துராமலிங்க புரம்” எனப் பெயர் சூட்டும் தீர்மானத்தை நிறைவேற்றி மக்களின் மனதை வென்றவர். மீனாட்சி மில் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டபோது, அவர்களுக் காகத் தார்மீக ஆவேசத்துடன் சட்டப் போராட்டம் நடத்தியவர். உயர்நீதிமன்றம் வரை சென்று, வழக்கறிஞர் தோழர் வைகை அவர்களின் வழிகாட்டுதலோடு தொழிலாளர்களுக்கு உரிய பணிக்கொடை களை பெற்றுத் தந்ததில் அவரது பங்கு ஈடு இணையற்றது. ஏழைகளின் தோழர் வில்லாபுரம் மற்றும் பழங்காநத்தம் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களை ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் கட்டப் பிரித்துக் கொடுத்த அவரது செயல், இன்றும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திருக்கிறது. தோழர்கள் பி. ராம மூர்த்தி, கே.பி. ஜானகியம்மாள், என்.சங்கரய்யா போன்ற மாபெரும் தலைவர் களோடு தோளோடு தோள் நின்று போராட்டக் களங்களைச் சந்தித்தவர். இன்றும் பழங்காநத்தம் பகுதித் தோழர்களுக்கு ஒரு வழிகாட்டும் துருவ நட்சத்திரமாக, ‘வாழும் முன்னுதாரணமாக’ திகழ்கிறார். நூற்றாண்டு காணும் இந்த மாமனிதரை, செங்கொடி இயக்கத்தின் மூத்தத் தூணை வாழ்த்துவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்! பி. வீரமணி, செயலாளர், சிபிஎம் மதுரை மாநகர் மேற்கு - 1ஆம் பகுதிக்குழு</p>
