தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வே. ஆனைமுத்து நூற்றாண்டு விழா: பெரம்பலூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

12 Mar 2026, 4:20 pm
வே. ஆனைமுத்து நூற்றாண்டு விழா:  பெரம்பலூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
<p><strong>வே. ஆனைமுத்து நூற்றாண்டு விழா:&nbsp; பெரம்பலூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!</strong></p> <p>பெரம்பலூர், மார்ச் 12- &nbsp;பெரம்பலூரில் நடைபெற்ற சமூக நீதிக்காவலர் வே. ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா முன்னிலை வகித்தார். அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், வே. ஆனைமுத்து நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்த துணை முதலமைச்சர், விழா மலரையும் வெளியிட்டார். தொடர்ந்து, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 6,127 பயனாளிகளுக்கு சுமார் ரூ. 359 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், ரூ. 34 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், ரூ. 44.67 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர், &ldquo;மகளிர் இலவசப் பேருந்து பயணம், காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தற்போது 1.32 கோடி மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது; அடுத்த ஆட்சியில் இது ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும். சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்குப் பிரத்யேக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 11.19 சதவீதப் பொருளாதார வளர்ச்சியுடன் தமிழகம் இன்று இந்தியாவில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது&rdquo; எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் எம்பிக்கள் அருண் நேரு, ஆளூர் ஷாநவாஸ், எம்எல்ஏக்கள் பிரபாகரன், கு. சின்னப்பா, க.சொ.க. கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.