முந்தய பக்கம்

உத்தரகண்டில் 8 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

yesterday
உத்தரகண்டில் 8 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

உத்தரகண்டில் 8 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

டேராடூன்பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜூன் 8 முதல் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் தீவிரதிருத் தத்திற்குப் பிறகு (எஸ்.ஐ.ஆர்) அக்டோபர் 3 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த திருத்தப் பணி தொடங்குவதற்கு முன்பு உத்தரகண்ட் மாநிலத்தில் 79.6 லட்சமாக இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, இறுதிப் பட்டியலில் 71.58 லட்சமாகக் குறைந்துள்ளது. அதாவது 8.01 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக உத்தரகண்ட் மாநிலக் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சூர்யகாந்த் தஸ்மனா கூறுகையில்,”சிறப்புத்தீவிரத் திருத்தப் பணியில் 8.5 லட்சத்துக்கும் அதிகமான பெயர்களும், அதற்கு முன்னதாக 4.5 லட்சம் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. உத்தரகண்ட் போன்ற ஒரு சிறியமாநிலத்தில் மொத்தம் 13 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது ‘வாக்குத் திருட்டு’ முறைகேடாகும். படிவம் 6 மற்றும் படிவம் 7-ல் பல முறைகேடுகள் நடந்துள்ளதால், நீக்கப்பட்ட அனைத்து வாக்காளர்களின் பெயர்களையும் உடனடியாக மீண்டும் சேர்க்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram