முந்தய பக்கம்

உத்தரகண்டில் வினாத்தாள் கசிவு

24 Jul 2026, 9:11 pm
உத்தரகண்டில் வினாத்தாள் கசிவு
<p><strong>உத்தரகண்டில் வினாத்தாள் கசிவு</strong></p><p>டேராடூன் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் காரண மாக தேசிய அளவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநில பல்கலைக்கழ கத்தில் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ளது வீர மாதோ சிங் பண்டாரி தொழில் நுட்ப பல்கலைக்கழகம். இங்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாண வர்களுக்கான பி.டெக் மின்னணுவியல் பாடப் பிரிவை சேர்ந்த வினாத்தாள்கள் கல்லூரி இணையதளம் மற்றும் வாட்ஸ்அப்பில் கசிந்தது. இதை தொடர்ந்து, பி.டெக் தேர்வு கள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தேர்வுக் கட்டுப் பாட்டாளர் வி.கே.படேல் கூறுகையில், “முதற் கட்ட விசாரணையில் உதவி பேராசிரியர் ஆஷிஷ் குமார் குப்தா வாட்ஸ் அப்பில் பகிர்ந்த கேள்விகள், இறுதி தேர்வு வினாத் தாளுடன் 95 சதவீதம் வரை ஒத்துப்போனது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கசிந்த வினாத்தாள்கள் தொடர்பான தேர்வுகளை ரத்து செய்தனர்” என அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram