தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உத்தரப்பிரதேசத்தில் பலத்த கனமழை, சூறாவளிக் காற்று 104 பேர் பேர் பலி ; கிராமங்கள் துண்டிப்பு

14 May 2026, 9:27 pm
உத்தரப்பிரதேசத்தில் பலத்த கனமழை, சூறாவளிக் காற்று 104 பேர் பேர் பலி ; கிராமங்கள் துண்டிப்பு

உத்தரப்பிரதேசத்தில் பலத்த கனமழை, சூறாவளிக் காற்று 104 பேர் பேர் பலி ; கிராமங்கள் துண்டிப்பு

லக்னோ, மே 14 - உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2 மாத காலமாக கோடை வெயில் கொளுத்தி வந்தது. மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாத சூழலில், திடீரென புதனன்று மாநிலத்தின் மொத்தமுள்ள 75 மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை கடும் சூறாவளிக் காற்று மற்றும் இடி மின்னலுடன், ஆலங்கட்டி மழை புரட்டிப் போட்டுள்ளது. இந்த கனமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 104 பேர் உயிரிழந்துள்ளனர். 53 பேர் படுகாயங்களு டன் மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். பலரை காணவில்லை. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அலகாபாத்தில் மட்டும் 21 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான அலகாபாத்தில் மட்டும் அதிக பட்சமாக 21 பேர் உயிரிழந்தனர். அதே போல பதோஹியில் 18 பேரும், மிர்சா பூரில் 15 பேரும், பதேபூரில் 9 பேரும், பதா வுனில் 6 பேரும், பிரதாப்கர் மற்றும் பரேலியில் தலா 4 பேரும் உயிரிழந்துள்ள னர். கான்பூர் தேஹாத், தியோரியா, சோன்பத்ரா உள்ளிட்ட பிற மாவட்டங் களிலும் உயிரிழப்புகள் பதிவாகி யுள்ளன.

கால்நடைகள்

இந்த திடீர் கனமழைக்கு 114 கால்ந டைகள் உயிரிழந்துள்ளன. 87 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக நிவாரண ஆணையம் முதற்கட்டமாகத் தெரிவித்துள்ளது. எனினும் 300க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளைக் காணவி ல்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

100 கிராமங்கள் துண்டிப்பு

பதோஹி, மிர்சாபூர் பகுதிகளில் கங்கை ஆற்றின் குறுக்கே இருந்த தற் காலிகப் பாலங்கள் சேதமடைந்து ள்ளதால் நூற்றுக்கணக்கான கிராமங் கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல பகுதி களில் வீடுகள் இடிந்தும், விளம்பரப் பலகைகள், தகரக் கூரைகள் காற்றில் பறந்தும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி யுள்ளன. பல இடங்களில் வாகனங்கள் மரங்கள் விழுந்து நசுங்கின. பலத்த காற்றினால் மரங்கள், மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மாநி லத்தின் பெரும்பாலான பகுதிகள் இரு ளில் மூழ்கி, இயல்புநிலையை இழந்துள்ளன.

50 அடி தூரம் பறந்த நபர்

பரேலி மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் பலத்த காற்றினால் தகரக் கூரையுடன் சேர்த்து நன்ஹே மியான் என்ற நபர் சுமார் 50 அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. இதுதொடர்பாக வீடியோவும் வெளியாகியுள்ளது.

நிவாரணம் அறிவிக்கவில்லை

இந்த சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச பாஜக முதலமைச்சர் ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை மட்டும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட் டுள்ளார். ஆனால் நிவாரணம் அறிவிக்கவில்லை.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.