தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்கேன் இந்தியா

12 Nov 2025, 3:20 pm
ஸ்கேன் இந்தியா

இப்படியா..?

2027 ஆம் ஆண்டில் உத்தரப்பிர தேச சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பகுஜன்சமாஜ் கட்சி அதற்கான தயாரிப்பில் இறங்கிவிட்டது. தனியாகத்தான் போட்டியிடப் போகிறோம் என்று கூறிவிட்டார்கள். கடந்த இரண்டு தேர்தல்களி லும் வாக்கு விழுக்காட்டில் ஏற்பட்ட சரிவைச் சமாளிக்க என்ன செய்வது என்ற ஆலோச னையில் உள்ளனர். இதற்கிடையில், ஆம் ஆத்மிக்கட்சியும் தனது பணிகளைத் தொடங்கி யுள்ளது. தனியாகப் போட்டியிடுகிறோம் என்று அவர்களும் இப்போதே அறிவித்து விட்டனர். கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. ஆனால் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து நின்றால் பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறிவிடும். இப்படியா ஒற்றுமையைச் சிதைப்பது என்கிறார்கள் சமாஜ்வாதிக் கட்சியினர்.

இப்படித்தான்..!

மீண்டும் “ராம்”  என்று பாஜக வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள். வாக்குகளுக்காக மதவெறியைக் கிளப்பிவிட்டு, மசூதியை இடித்து மக்களை மதரீதியாகப் பிரிப்பதில் பாஜக வெற்றி கண்டது. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக உத்தரப் பிரதேச மக்கள் வாக்களித்தனர். இதனால் ஜெய் ஸ்ரீராம் என்பதை மோடி உச்சரிக்க மறுத்தார். ஒடிசாவில் பாஜக வெற்றி பெற்றிருந்ததால் ஜெய் ஜகந்நாத் என்றார். கடந்த ஓராண்டாகவே பாஜகவினர், ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தைக் கைவிட்டு விட்டார்கள். ஆனால் மீண்டும் அதைக் கையில் எடுக்கும் திட்டம் இருப்பதாகத் தெரிகிறது. 25 மீட்டர் காவிக்கொடியை ராமர் கோவில் மீது வைப்பதற்கான நிகழ்வில் மோடி பங்கேற்கவிருக்கிறார். இவர்கள் இப்படித்தான் என்று மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.

இப்படியும்..!!

முன்னாள் இந்தித் திரைப்பட சூப்பர் ஸ்டார் தர்மேந்திரா உடல்நலன் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி ருந்தார். சில ஊடகங்கள் “நேரடி” ஒளிபரப்பைச் செய்து கொண்டிருந்தன. செய்திகளை முந்தித் தர வேண்டும் என்பதற்காகச் சில ஊடகங்கள் “எப்போது வேண்டுமானாலும்” அறிவித்து விடுவார்கள் என்றெல்லாம் மருத்துவமனை வாயிலில் நின்று கூறின. ஒரு முன்னணிப் பத்திரிகையோ, அவரது “மரணத்தை” உறுதி செய்தது. மேலும் சில ஊடகங்கள் மருத்துவமனையில் தெளிவுபடு த்திக் கொள்ளாமல், அவர்களும் ஒருவரிச் செய்தியாக ஓட விட்டனர். இப்படியும் இருக்கிறார்களே என்று குடும்பத்தினரும், மருத்துவர்களும் தலையில் அடித்துக் கொண்டார்கள். மருத்துவமனையில் இருந்து தர்மேந்திரா வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இப்படிக்கு..!

அரசியலில் நேர் எதிராக இருக்கும்  பாஜகவும், சரத் பவார் தலைமை யிலான தேசியவாத காங்கிரசும் அவ்வப்போது கைகோர்த்துக் கொள்கின்றன. மும்பை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவிருந்தது. தலைவர் பதவிக்கு எட்டு பேர் மனு தாக்கல்  செய்திருந்தார்கள். யாரும் பின்வாங்கவில்லை. உறுதியாக இருந்தனர். இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் சரத் பவாரும், முதல்வர் பட்னாவிசும் சந்தித்துக் கொ ண்டார்கள். ஏற்கனவே தலைவராக இருந்து வந்த அஜின்க்யா நாயக் தொடரட்டும் என்று முடிவெடுத்தார்கள். இதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்தது. “அவர்தான் தலைவர் - இப்படிக்கு சரத் பவார், பட்னாவிஸ்” என்று சொல்லுங்கள் என்றார்கள். நாயக் தலைவராகிவிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.