தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரயில்வே பகுதியில் உயர்மட்ட நடைமேம்பாலம் அமைத்திடுக

25 Jun 2026, 1:14 am
ரயில்வே பகுதியில் உயர்மட்ட நடைமேம்பாலம் அமைத்திடுக
<p><strong>ரயில்வே பகுதியில் உயர்மட்ட நடைமேம்பாலம் அமைத்திடுக</strong></p><p>திருப்பூர், ஜூன் 24- ஊத்துக்குளி, பி.ராமமூர்த்தி நகர் ரயில்வே பகுதியில் உயர்மட்ட நடை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டத்திற்குட்பட்ட வடுகபாளையம் கிராமம், பி.ராமமூர்த்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கே.கே.நகர், செந் தில் நகர், சரஸ்வதி நகர், சாய்பாபா நகர், புதுத்தோட்டம் உள்ளிட்ட குடியி ருப்பு பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப் பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அன்றாடம் பின்னலாடை நிறுவனங்களுக்கு செல்லும் தொழிலா ளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவ ரும் தங்களின் அன்றாட தேவைகளுக் காகவும், பேருந்து நிலையத்தை அடை வதற்காகவும் அப்பகுதியிலுள்ள ரயில்வே கேபின் மற்றும் தண்டவாளப் பகுதியை கடந்து சென்று வந்துள்ள னர். இதன்மூலமே அவர்கள் மேற்குப் புறத்திருள்ள மஹாராஜா பேருந்து நிறுத்தத்திற்கு சென்று, பேருந்து ஏறி பள்ளி மற்றும் பணிகளுக்கு சென்று வந்தனர். தற்போது ரயில்வே துறையி னர் எவ்வித இடைவெளியுமின்றி தண்ட வாளப் பாதையின் இருபுறமும் தடுப்புச் சுவர்கள் மற்றும் இரும்பு வேலிகளை அமைத்து மூடியுள்ளனர். இதன் காரண மாக மக்கள் மாற்றுப்பாதையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் சென்றே பேருந்து நிறுத்தத்தை அடைய வேண் டிய மிக அவதிக்குரிய நிலை ஏற்பட் டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி பொதுமக் கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ராமமூர்த்தி நகர் கிளை சார்பில் தொடர் கோரிக்கைகள் எழுப் பப்பட்டு வந்தன. சுற்று வட்டார பகுதி மக்களின் அவசரத் தேவையை கருத் தில் கொண்டு, இப்பகுதியில் பொது மக்கள் எளிதாகக் கடந்து செல்லக்கூ டிய வகையில் உயர்மட்ட நடைபாதை பாலம் அமைக்க வேண்டும். இது குறித்து ரயில்வே துறைக்கு உரிய பரிந்துரைகளை திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கையெழுத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பி.ராமமூர்த்தி நகர் கே.கே.தகர் கிளைச் செயலாளர் எல். லோகநாதன் கோரிக்கை விடுத்துள் ளார். இதையடுத்து அந்த மனுவை, புதனன்று ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவரும், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஆர். குமார், திருப்பூர் எம்.பி. அலுவலகத் தில் அவரது உதவியாளரிடம் வழங்கி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.