தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊத்துக்குளி அருகே ஓர் அத்திப்பட்டி! அரசின் கடைக்கண் பார்வை கிடைப்பது எப்போது?

17 Jun 2026, 10:16 pm
ஊத்துக்குளி அருகே ஓர் அத்திப்பட்டி! அரசின் கடைக்கண் பார்வை கிடைப்பது எப்போது?

ஊத்துக்குளி அருகே ஓர் அத்திப்பட்டி! அரசின் கடைக்கண் பார்வை கிடைப்பது எப்போது?

திருப்பூர், ஜூன் 17 - ஊத்துக்குளி அருகே அரசு பட்டா வழங்கி உருவாகிய ஒரு மக்கள் குடியிருப்பு பகுதிக்கு, கடந்த 30 ஆண்டு காலமாக எந்த அடிப்படை வசதியும் செய்து தரா மல் அரசே புறக்கணித்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா, ரெட்டியபாளையம் கிராமத்தில் உள்ள இந்த “அத்திப்பட்டிக்கு” அம்பேத்கர் நகர் என்று பெயர். கடந்த 1995 ஆம் ஆண்டு ஆதிதி ராவிடர் நலத்துறை நிலத்தை கைய கப்படுத்தி 380 மனைப்பிரிவுகள் உருவாக்கி, பட்டியலின மக்க ளுக்கு பட்டா வழங்கியது. தற் போது இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார் கள். ஆனால், நிலமெடுப்பு செய்யப் பட்டு 30 ஆண்டுகள் கடந்த பின்னும், முறையான பாதை வசதி செய்து தராததால் பட்டா பெற்ற மக்கள் முழுமையாகக் குடியேற முடியாத அவல நிலை நீடிக்கிறது.

துண்டிக்கப்படும் அபாயத்தில் பொதுப்பாதை

இப்பகுதி மக்கள் ஊத்துக்குளி நகரத்திற்கு செல்ல முறையான சாலை இல்லாததால், ரயில்வே பாதையின் இருபுறமும் உள்ள பாதையைத் தான் பயன்படுத்தி வந்தனர். தற்போது அங்குள்ள குறு கிய இரயில்வே நுழைவுப் பாலத் தின் அடியில் மண் அரிப்பு ஏற்பட்டு, இருசக்கர வாகனங்களில் செல் வோர் கீழே விழுந்து காயமடையும் அபாயகர சூழல் உள்ளது. மேலும், ஆபத்தான நிலையில் உள்ள கரடு முரடான வண்டிப்பாதையில், இப் பகுதிக்கு அவசர கால ஆம்பு லன்ஸ், வாடகை ஆட்டோக்கள் வர மறுக்கின்றனர். இச்சூழலில், தற்போது ரயில்வே துறையினர் தங்களது எல்லையை பாதுகாக்க இருப்புப் பாதையின் இருபுறமும் இரும்புத் தண்டவாளங்களை நட்டு, வேலி அமைத்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் பயன்படுத்தி வந்த தற்காலிக பாதையும் முற்றிலும் தடைப்பட்டு, குடியிருப்பு பகுதி மொத்தமாக துண்டிக்கப்படும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய குடியிருப் புப் பகுதியில் மயானத்திற்கு இடம் உட்பிரிவு செய்து, அதற்கு சுற்றுச்சுவர் அமைத்துத் தராததால், யாரேனும் உயிரிழந்தால் பிணத்தை பெரும் செலவு செய்து தங்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு சென்று அடக்கம் செய் யும் அவல நிலை உள்ளது. மேலும், கூலி வேலைக்குச் செல்லும் இப்பகுதி மக்களின் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக் காக ஒரு அங்கன்வாடி மையம் அமைக்கக் கோரியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. அங்குள்ள பொது ஒதுக்கீடு நிலங் களும் சமூக விரோதிகளால் ஆக்கிர மிக்கப்பட்டு வருகின்றன.

வருவாய் தீர்ப்பாயத்தில் கோரிக்கை

இந்த குடியிருப்புப் பகுதிக்கு முறையான சாலை, மயானம் மற் றும் அங்கன்வாடி ஆகிய அடிப் படை உள்கட்டமைப்பு வசதி களைப் போர்க்கால அடிப்படை யில் நிறைவேற்றித் தர, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஊத்துக்குளி தாலுகா தலைவர் ஆர்.மணியன், ஊத்துக் குளி வட்ட வருவாய் தீர்ப்பாயத் தில் (ஜமாபந்தி) புதனன்று கோரிக்கை மனு அளித்தார்.

முக்கியக் கோரிக்கைகள்

ஊத்துக்குளி - சென்னிமலை சாலையில் இருந்து வரும் வண்டிப் பாதை புறம்போக்கை உடனடி யாக தார்ச் சாலையாக மாற்ற வேண்டும். இரயில்வே நிர்வாகம் அமைக்கும் இரும்புத் தண்டவாள வேலியால் பொதுப்பாதை தடைப டாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட வேண் டும். ரயில்வே புறம்போக்கை ஒட் டிய தெற்குப் பகுதியில் உள்ள தனி யார் நிலத்தை கையகப்படுத்தி நிரந் தரப் பாதை அமைக்க வேண்டும். அம்பேத்கர் நகர் மக்களுக்கு சுற்றுச்சுவருடன் கூடிய மயான வசதி மற்றும் புதிய அங்கன்வாடி மையத்தை உடனடியாக அமைத்து தர வேண்டும். அரசு ஆவணங்கள் மற்றும் வரு வாய்த்துறை பதிவேடுகளில் இக் குடியிருப்பை இழிவான பெயர்க ளில் அழைப்பதை தடுத்து, அதி காரப்பூர்வமாக அம்பேத்கர் நகர் என்றே பயன்படுத்த அரசாணை வெளியிட வேண்டும். பல தலைமுறைகளாக தொட ரும் பட்டியலின மக்களின் இந்த அவல நிலையைப் போக்க, வரு வாய்த்துறை, ஆதிதிராவிடர் நலத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகள் ஒருங் கிணைந்து உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.