100 நாள் வேலை வழங்க கோரி ஊத்தங்கரையில் ஆர்ப்பாட்டம்
25 Sept 2026, 1:09 am

100 நாள் வேலை வழங்க கோரி ஊத்தங்கரையில் ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரை, செப். 24-ஊத்தங்கரை ஒன்றியத்தில் இதுவரை 100 நாள் வேலை வழங்கப்படாத அனைத்து கிராமங்களுக்கும் உடனடியாக வேலை வழங்க வேண்டும். 100 நாள் தொழிலாளர்களுக்கு கருவிழி ஸ்கேன் முறையை கைவிட வேண்டும். ஊத்தங்கரை வட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டக்குழுத் தலைவர் எத்திராஜி தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் எம்.முத்து, மாவட்டத் தலைவர் இரா.லெனின், மாவட்டச் செயலாளர் கே.செல்வராசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் சபாபதி மற்றும் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் வேலு, உஷா, கல்பனா, கிருஷ்ணன், துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.