முந்தய பக்கம்

யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

12 Nov 2025, 6:35 am
யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!
<p>2025ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.</p> <p>2025 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வில் நாடு முழுவதும் 2,736 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் தமிழ்நாட்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 13.97% அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 136 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.&nbsp;<br /> அதேவேளையில், 2024ல் மாநில அரசின் பயிற்சி மையத்தில் பயின்றவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 48ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 85ஆக அதிகரித்துள்ளது.<br /> தமிழ்நாட்டில் இருந்து இந்தாண்டு தேர்ச்சி அடைந்த மாணவர்களில், 54.84% பேர் மாநில அரசின் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள், இது கடந்தாண்டு 35.29% ஆக இருந்தது. தேர்வாகியுள்ள அனைத்து மாணவர்களும் அடுத்தக்கட்டமாக நேர்முகத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram