கைவிடப்பட்ட குவாரிகளை மக்களின் நலனுக்குப் பயன்படுத்துங்கள்! - கே.பி.பெருமாள்
7 Oct 2026, 9:05 pm

கைவிடப்பட்ட குவாரிகளை மக்களின் நலனுக்குப் பயன்படுத்துங்கள்! - கே.பி.பெருமாள்

இந்தியா முழுவதும் பல்லா யிரக்கணக்கான கைவிடப்பட்ட கல்குவாரிகள் இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது. பெரிய கனிமச் சுரங்கள், சிறிய கனிமங்கள் மற்றும்கிரானைட் குவாரிகள் என வகைப்படுத்துவதைப் பொறுத்து இந்திய அளவில் இவற்றின் எண்ணிக்கை வேறுபடுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 5,051க்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட குவாரிகளும், கேரளாவில் 3,000குவாரிகளும் உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகாமற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆயிரக்கணக்கான குவாரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் கீழ்க்கண்டமாவட்டங்களில் அதிகப்படியான குவாரிகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது:

• திருவண்ணாமலை - 479; • கிருஷ்ணகிரி - 409;

• கரூர் - 387; • கோவை - 329; •சேலம் - 274;

•நாமக்கல்-271; •விருதுநகர் - 270;

•திருப்பூர்-250; •மதுரை - 216;

•திருநெல்வேலி - 163

சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் மீட்புத் திறன்

மாநிலத் திட்டக் குழுவின் ஆய்வின்படி, அடையாளம் காணப்பட்ட 5,051 குவாரிகளில் 90 சதவீத இடங்கள் (4,569 குவாரிகள்) மிக மோசமான சுற்றுச்சூழல்பாதிப்புடன் உள்ளதால், குறைந்த மறுசீரமைப்புத் திறன் கொண்டவையாக உள்ளன. இருப்பினும், கனிமங்களின்தன்மையைப் பொறுத்துச் சில சுரங்கங்களை மீண்டும் இயற்கை நிலைக்குக் கொண்டுவர முடியும் என அரசுபட்டியலிட்டுள்ளது.

• அதிக மீட்புத் திறன் கொண்டவை: அரியலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள 88 சுண்ணாம்புக்கல் மற்றும் மேக்னசைட் சுரங்கங்களை எளிதாக நீர்நிலைகளாகவோ அல்லது காடுகளாகவோ மாற்ற முடியும்.

• குறைந்த மீட்புத் திறன் கொண்டவை: கிருஷ்ணகிரி மற்றும் மதுரையில் உள்ள கிரானைட் மற்றும் கருங்கல் குவாரிகளை சுற்றுச்சூழல் ரீதியாக மீட்டெடுப்பது கடினம் என்று அரசு தெரிவித்துள்ளது.

அதிக மீட்புத் திறன் கொண்ட குவாரிகளின் மறுபயன்பாடு

தமிழ்நாட்டில் கைவிடப்பட்ட அல்லது பயன்படுத்தப்படாத மீட்புத் திறன் கொண்ட குவாரிகளை நிலையான மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிகளில் மறுபயன்பாட்டிற்கு கொண்டுவருவது நீர் மேலாண்மைக்கும் பசுமை மேம்பாட்டிற்கும் மிகவும் முக்கியமானது.சென்னைக்கு அருகில் உள்ள சிக்கராய புரம் மற்றும் எருமையூர் குவாரிகள் நீர்த்தேக்கங்களாக மாற்றப்பட்டுச் சென்னை மாநகராட்சி யின் குடிநீர் தேவையைப் போக்கப் பயன்படுவது போல்,மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள குவாரிகளைத் தூய்மைப்படுத்தி நீர்த்தேக்கங்களாக மாற்றலாம்.

• சூரிய மின் உற்பத்தி: குவாரிகளில் தேங்கியுள்ள நீரின் பரப்பில் மிதக்கும் சூரிய மின் தடுகளை (Floating Solar Panels) அமைப்பதன் மூலம் கணிசமான மின்சாரம் தயாரிக்கலாம்.

• நீரேற்று மின் நிலையம் (Pumped Storage): வெவ்வேறு உயரங்களில் இருக்கும் இரண்டு குவாரிப் பள்ளங்களைப் பயன்படுத்தி, மின் தேவை அதிகம் உள்ள நேரங்களில் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டத்திற்கு நீரைப் பாய்ச்சி மின்சாரம் தயாரிக்கலாம்.

• நகர்ப்புறப் பூங்காக்கள்: கைவிடப்பட்ட கல்குவாரிகளை இயற்கை எழில் கொஞ்சும் நகர்ப்புறப் பூங்காக்களாகவும் பறவைகள் சரணாலயமாகவும் மாற்ற முடியும்; மரங்களை அதிக அளவில் நடலாம். மறுசுழற்சிசெய்ய முடியாத கழிவுகளைத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி முறையாகச் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் அபாயமற்ற கட்டுமானக் கழிவுகளைக் கொண்டு ஆழமான பள்ளங்களை மூடலாம். எனினும், நிலத்தடி நீர் பாதிக்கப்படாதவாறு முறையான அறிவியல் பூர்வ திட்டமிடல் இதற்கு அவசியமாகும்.

குறைந்த மீட்புத் திறன் கொண்ட குவாரிகளுக்கான மாற்று வழிகள்

குறைந்த மீட்புத் திறன் கொண்ட அல்லது கைவிடப்பட்ட குவாரிகளை மாற்று வழிகள் மூலம் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் பொருளா தாரத்திற்குப் பயன்படும் வகையில் மாற்றி அமைக்கலாம். ஆழமான கல்குவாரிகளை மழைநீர் சேமிப்பு நிலைகளாக மாற்றலாம். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, வறட்சிக் காலங்களில்சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யலாம்; விவசாயத்திற்கும் தண்ணீரைப் பயன்படுத்தலாம். பாதுகாப்பான நீர்நிலைகளாக மாற்றப்பட்டபிறகு, கூண்டு மீன் வளர்ப்பு, படகுப் போக்கு வரத்து, பொழுதுபோக்குப் பூங்காக்கள் மற்றும் சாகச விளையாட்டு மையங்களாகவும் பயன் படுத்தலாம்.

நீர் சேமிப்பு மற்றும் விவசாயப் பாசனம்

கைவிடப்பட்ட குவாரிகள் மூலமாகச் சேமிக்கக்கூடிய நீரின் அளவு மற்றும் அதன் மூலம் பயன்பெறக்கூடிய விவசாய நிலங்களின் பரப்பளவு குறித்துப் பார்த்தால், தமிழ்நாட்டில் 1,188 கைவிடப்பட்ட கல்குவாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 112 குவாரிகள் அரசு நிர்வாகத்திலும், 1,076 கல்குவாரிகள் தனியார் வசம் இருந்தவையாகும். இவை பெரும்பாலும் 15 முதல் 40 மீட்டர் ஆழம் கொண்டவை.

கைவிடப்பட்ட குவாரிகள் சாதாரண ஏரிகளை விடப் பரப்பளவில் சிறியதாக இருந்தாலும், ஆழம்

அதிகமாக இருப்பதால் மிக அதிக அளவில் நீரைச் சேமிக்க முடியும். சென்னையில் உள்ள சிக்கராயபுரம் (25 குவாரிகள்), எருமையூர் (10 குவாரிகள்) ஆகியவை மட்டும் சுமார் 1,000 மில்லியன் கன அடி நீரைச் சேமிக்க முடியும் எனச் சென்னை குடிநீர் வாரியம் நிரூபித்துள்ளது. ஒட்டுமொத்தத் தமிழகம் முழுவதிலும் உள்ள 1,188 குவாரிகளையும் முழுமையாகப் பயன்படுத்தி, மழைநீர் மற்றும் நதிகளின் உபரி நீரைத் திருப்பினால், தோராயமாக 5,000 முதல் 7,000 மில்லியன் கனஅடி வரை கூடுதலான நீரைச் சேமிக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அளவு, சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்ப ரம்பாக்கம் ஏரியின் மொத்தக் கொள்ளளவில் பாதியை விடஅதிகமாகும்.

தமிழகத்தில் உள்ள முக்கிய குவாரிகளை நீர்நிலைகளாக மாற்றும்போது, அவற்றிலிருந்து கிடைக்கும் நீரைக் கொண்டு நேரடியாகத் துவக்கமாக 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்க முடியும். மேலும், குவாரிகளில் நீர் தேங்குவதால் 3 முதல் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும். இந்த மறைமுக நன்மையால் ஆயிரக்கணக்கான விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் நிரம்பி வழியும்; இதன் மூலம் சுமார் 50,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

கைவிடப்பட்ட குவாரிகளை வெறும் பாழடைந்த பள்ளங்களாக, நிலங்களாகப் பார்க்காமல்அவற்றைச் சூழலியல் மீட்புக்கான அரிய வாய்ப்புகளாகக் கருத வேண்டும். மேலும், இவற்றை நீர் மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும்சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதுடன், மீன் வளர்ப்பு, காடுகள் வளர்ப்பு, விவசாயத்திற்குப் பாசன வசதி மற்றும் குடிநீர் பயன்பாடு உள்ளிட்டவைகளுக்காகத் தமிழ்நாட்டில் உள்ள கைவிடப்பட்ட குவாரிகளைப் பயன்படுத்த அரசுகூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொண்டால் தண்ணீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யவும், எதிர்கால சந்ததியினருக்குப் பயன் அளிக்கும்நடவடிக்கையாகவும் அமையும்!