தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விலை உயர்வுக்கு அமெரிக்காவும், மோடி அரசும் தான் காரணம்!

20 May 2026, 11:15 pm
விலை உயர்வுக்கு அமெரிக்காவும், மோடி அரசும் தான் காரணம்!

விலை உயர்வுக்கு அமெரிக்காவும், மோடி அரசும் தான் காரணம்!

பெ. சண்முகம் குற்றச்சாட்டு சென்னை, மே 20- பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உரையாற்றி னார்.

அப்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு போன்ற நெருக்கடிக் கெல்லாம் மூலக் காரணம், கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்த யுத்தம் தான்.

நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசும், இந்த யுத்தத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவான நிலை எடுத்தது.

ஈரானுக்கு எதிராக நடந்து கொண்டது.

யுத்தத்தை துவங்கியபோது “ஈரான் என்ற சின்னஞ்சிறிய நாட்டை ஒரு வார காலத்திற்குள் முடித்து விடுவேன் என்று டிரம்ப் பேசினார். தற்போது ஏறத்தாழ 80 நாட்கள் கடந்த பின்பும் இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

தற்போது டிரம்ப் சீனாவுக்குச் சென்று, சீன ஜனாதிபதியைப் பார்த்து, அவரது உதவியை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பிரச்சனையை ஆரம்பித்து விட்டு, டிரம்ப் ஜம்பம் அடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், இந்த யுத்தத்தினால் பாதிக்கப்படு வது சாதாரண பொதுமக்கள்தான். இந்தியா மட்டுமல்ல, வளைகுடா நாடுகள், தெற்காசிய, மேற்காசிய நாடுகள் என பல்வேறு நாட்டினுடைய மக்கள் மீள முடியாத நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

எனவே யுத்தத்தை உடனடியாக நிறுத்து என்ற முழக்கத்தை இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்த குரலை எழுப்ப வேண்டும்.

யுத்தத்தினால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள், குழந்தைகள் கொல்லப்படு கிறார்கள், பல லட்சக்கணக்கான மக்கள் உடல் ஊனமுற்றவர்களாக மாற்றப்படுகிறார்கள்.

இதன் மூலம் ஆயுத வியாபாரிகளும், எண் ்ணெய் வியாபாரிகளும் தான் கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் யாருக் காக சண்டை போடுகிறார்கள்? அமெரிக்க ஏகாதி பத்தியம் தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, தேவை யற்ற இந்த யுத்தத்தை துவக்கி இன்று அந்த யுத்தத்தை நிறுத்த முடியாது என்ற அளவுக்கு நீடித்துக் கொண்டிருக்கிறது.

இதனால் பாதிக்கப் படுவது சாதாரண அப்பாவி மக்கள் தான்.

யுத்தத்தை நிறுத்துவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, ‘ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்காதீர்கள்’, ‘பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துங்கள்’ என்று நிறைய இலவச அறிவுரைகளைப் பிரதமர் மோடி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இப்போது சாதாரண ஏழை எளிய உழைப்பாளி மக்கள் என்ன சொந்தக் காரில்தான் சென்று கொண்டிருக்கிறார் களா? அதேபோல தினசரி காலையில் எழுந்தவுடன் எல்லோரும் நகைக் கடைகளுக்கு சென்று ஆளுக்கு ஒரு கிலோ தங்கத்தை வாங்கி வீட்டில் வைத்து விட்டுதான் மறுவேலை என்று இருக்கிறார்களா? மோடி ஆட்சியில் ‘கல்யாணி கவரிங்’ நகையைக் கூட வாங்க முடியாத நிலைக்கு மக்களைத் தள்ளப் பட்டுள்ளனர்.

இதையெல்லாம் மறந்து விட்டு பிரதமர் மோடி பேசுகிறார். அவர் எந்த உலகத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை.

இது ஏதோ வெறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எரிவாயு விலை உயர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை.

ஒட்டுமொத்த நாட்டினுடைய பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பையும், நெருக்கடியையும் உருவாக்கக் கூடியது.

அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை யும் உயரும்.

எனவே, ஒன்றிய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல், எரிவாயு மூலம் கிடைக்கும் வரி வருவாயில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக் கும் வகையில் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.