முடிவுக்கு வந்த அமெரிக்கா-ஈரான் போர்!
15 Jun 2026, 1:08 pm
<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளதாக இரு நாடுகளும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளன. </p><p>வரும் ஜூன் 19-ஆம் தேதி அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் மீதான தாக்குதல் உட்பட அனைத்து தாக்குதல்களை நிறுத்துவது, ஹோர்முஸ் நீரிணையை திறப்பு, ஈரானை சுற்றி நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகளை படிப்படியாக 30 நாட்களுக்குள் திரும்பப்பெறுவது, அணுசக்தித் திட்டம் குறித்து புதிய பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட அம்சங்கள் அமெரிக்க மற்றும் ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><br></p>
