தீக்கதிர் உலக செய்திகள்
8 Jan 2026, 2:44 pm

66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகல்

வாஷிங்டன், ஜன.8 - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ளார். இந்த அமைப்புகள் இனி “அமெரிக்காவின் நலன்களுக்குப் பயன்படாது” என்று கூறி, அதிகாரப்பூர்வ ஆவணத்திலும் கையெழுத்திட்டுள்ளார். 66 அமைப்புகளில் சுமார் 31 அமைப்பு கள் ஐ.நா அவையுடன் இணைந்த அமைப்புக்களாகும். இது மிகவும் அபாயகரமானது. அமெரிக்கா சர்வதேசக் கட்டுப்பாடுகள் விதிமுறைகளில் இருந்து வெளியேறியதன் மூலமாக ஒட்டு மொத்த உலகத்தையும் குழப்பம், போர்ப் பதற்றம் என பதற்றத்தில் தள்ளிவிடும் நட வடிக்கையில் ஈடுபடுகிறது என இந்நட வடிக்கைக்கு கண்டனம் எழுந்துள்ளது. ஏற்கெனவே ஐ.நா உதவி அமைப்பு களுக்கு அமெரிக்கா கொடுத்து வந்த நிதியை அதிகளவில் வெட்டியது. இதனால் சூடான், காசா என உலகம் முழுவதும் போர்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய உதவிகள் செய்ய இயலாமல் ஐ.நா உதவி அமைப்புகள் முடங்கும் நிலையில் உள்ளன. இதனால் லட்சக்கணக்கான மக்களின் உணவு, சுகாதாரம் உயிர்வாழ்தல் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த அமைப்புகள் அமெரிக்காவின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் இறை யாண்மைக்கு எதிராகச் செயல்படுகிறது. அமெரிக்க மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுகிறது. எனவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் “உலகளாவிய கொள்கைகளை விட, அமெரிக்க நாட்டின் முன்னுரிமைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்றும் கூறியுள்ளது. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை “நேர்மையற்றது” என்று விமர்சித்த டிரம்ப், அதிலிருந்தும் அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த முறையைப் போலவே, இப்போதும் உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றும் நடவடிக்கைகளை அவர் தொடங்கியுள்ளார்.

பாகிஸ்தான் - வங்கதேசம் இடையே நேரடி விமானபோக்குவரத்து

டாக்கா/இஸ்லாமாபாத், ஜன.8 - பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே 14 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி வணிக ரீதியிலான விமானப் போக்குவரத்து வரும் ஜனவரி 29 முதல் துவங்க வுள்ளது. வங்கதேசத்தின் அரசு விமான நிறுவனமான ‘பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்’ டாக்கா மற்றும் கராச்சி நகரங்களுக்கு இடையே வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்க உள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்த இரு நாடுகளுக்கும் இடையே நேரடி பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது 14 ஆண்டு களுக்குப் பிறகு இது மீண்டும் தொடங்குகிறது. தற்போது வங்கதேசத்திலிருந்து பாகிஸ்தான் செல்ல விரும்புவோர் துபாய் அல்லது கத்தார் வழியாகவே சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. நேரடி விமான சேவை தொடங்குவதால் வணி கர்கள், மருத்துவம் மற்றும் சுற்றுலாவுக்காகச் செல்பவர்கள் எளிதாக வும், விரைவாகவும் பய ணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்குப் பிறகு, அந்நாட்டின் இடைக் கால அரசு பாகிஸ்தானுடன் இணக்கமான உறவை ஏற்படுத்த ஆர்வம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதி யாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே கடல்வழி சரக்கு போக்குவரத்து தொடங்கப் பட்டது. தற்போது விமான சேவையும் இணைவது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெனிசுலா பொருளாதாரம் சூறையாடல் அமெரிக்கப் பொருட்களை அந்நாட்டுச் சந்தையில் திணிப்பேன் - டிரம்ப்

வாஷிங்டன்/காரகஸ், ஜன.8 வெனிசுலா ஜனாதிபதி மதுரோவை அமெரிக்கா கடத்தி சென்று ள்ள நிலையில் அந்நாட்டின் உயர்தர கச்சா எண்ணெய்யை அமெரிக்கா அபகரிக்கும் என டிரம்ப் கூறி யுள்ளார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், புதிய எண்ணெய் ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட் களை மட்டுமே இனிமேல் வெனிசுலா வாங்கப் போகிறது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வணிகத்தில் அமெரிக்காவின் விவசாயப் பொருட்கள், மின் கட்டமைப்பு சார்ந்த அமெரிக்கத் தயாரிப்புகள், அமெரிக்க மருந்துகள், மருத்துவ சாதனங்கள் உபகரணங்கள் ஆகியவை அந்நாட்டுச் சந்தைக்குள் கொண்டு செல்லப்படும் என்பதை உறுதிப் படுத்தியுள்ளார். மேலும் வெனிசுலா 30 முதல் 50 மில்லி யன் பீப்பாய்கள் வரையிலான உயர்தர கச்சா எண்ணெய்யை அமெரிக்காவிற்கு வழங்கப் போகிறார்கள். இந்த எண்ணெய் சந்தை விலையில் விற்கப்படும். அதிலிருந்து வரும் பணத்தை அமெரிக்க ஜனாதிபதியாகிய நானே நேரடியாகக் கையாளுவேன். இதற்கான பணி களை உடனடியாகத் தொடங்கு மாறு எரிசக்தித் துறை அமைச்ச ருக்கு உத்தரவிட்டுள்ளேன்.இந்த எண்ணெய் நேரடி யாக அமெரிக்கத் துறை முகங்களுக்குக் கொண்டு வரப்பட்டு, அமெரிக்க நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். டிரம்ப்பின் இந்த கூற்றுக்கு வெனி சுலாவின் இடைக்கால ஜனாதிபதியாகச் செயல்படும் டெல்சி ரோட்ரிக்ஸ், எங்கள் நாடு மீண்டும் ஒருபோதும் மற்றொரு நாட்டின் அடிமையாக மாறாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும் வெனிசுலா பல நாடுகளுடன் பொருளாதார உறவுகளைப் பேணி வருகிறது. எங்கள் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 71 சதவிகி தம் எட்டு நாடுகளை சார்ந்துள்ளது. அதில் அமெரிக்கா மட்டும் 27 சதவிகித பங்கைக் கொண்டுள்ளது. வெனிசுலாவின் இறையாண்மையை மதிக்கும் அனைத்து நாடுகளுடனும் பொருளாதார, வர்த்தக மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை முன்னெ டுக்க நாங்கள் தயாராக உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.