தீக்கதிர் உலக செய்திகள்
31 Oct 2026, 9:24 pm

உக்ரைனுக்கு ஏவுகணை விற்கஅமெரிக்கா ஒப்புதல்

உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் பிஏசி-3 ஏவுகணைகள் மற்றும் அதன் இயக்கத்திற்கு தேவையான சாதனங்களை 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல்அளித்துள்ளது. இந்த ஏவுகணைகள் வாங்க தேவையான பணமானது , ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் ஆதரவுக் கடன் நிதியுதவி மூலமாக வழங்கப்பட உள்ளது. மேலும்இதற்காக கனடா, ஜெர்மனி, நார்வே ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு நன்கொடையாக பணம் கொடுக்கும் எனசொல்லப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்கா இலவசமாகவோகடனாகவோ வழங்க வில்லை மாறாக ஐரோப்பிய நாடுகளிடம் பணம் வசூலித்துக்கொண்டு ஏவுகணை கொடுக்கிறது.

அர்ஜெண்டினா தூதருக்கு பிரேசில் சம்மன்

பிரேசில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான ஃபிளாவியோ பொல்சானரோ தேர்தல் தோல்விக்குப் பிறகு நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். இவர்மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் உள்ளன. இந்நிலையில் இவர் அர்ஜெண்டினா வழியாகவே தப்பித்து ஓடியுள்ளார் என்பதால் அவரை தப்பிக்க விட்டதில் அர்ஜெண்டினா அரசாங்கத்தின் பங்கு என்ன என்பது குறித்து விளக்கம்அளிக்குமாறு அந்நாட்டு தூதரகப் பொறுப்பாளர் மரியா எமிலியா கோர்டெஸ் க்கு பிரேசில் அரசு சம்மன் அளித்துள்ளது. பொல்சானரோ வுக்கு தற்போது அமெரிக்கா அடைக்கலம்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எத்தியோப்பியா மோதல் : கென்யாவிற்கு புலம்பெயரும் மக்கள் தெற்கு எத்தி

யோப்பி யாவில் கடந்த வாரம் வெடித்த கடும் உள்நாட்டு மோதல் காரணமாக, இதுவரை சுமார் 50,000 பேர் எல்லை தாண்டிகென்யாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐ.நா அவை தெரிவித்துள்ளது.எத்தியோப்பியாவின் சோமாலி மற்றும் ஒரோமியா மாநிலங்களில் உள்ள பிராந்தியப் படைகளுக்கு இடையே மோதல்உருவாகியுள்ளது. குறிப்பாக, இவ்விரு பிராந்தியங்களால் இணைந்து நிர்வகிக்கப்பட்டு வரும் ‘மொயாலே’ (Moyale) நகரில்சோமாலி பிராந்தியக் கொடி ஏற்றப்பட்டது. இதனால் இரு மாநில படைகளுக்கும் இடையே வன்முறை வெடித்தது. கடந்தஅக்டோபர் 20 துவங்கிய இந்த மோதலில் பலர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போராட்டங்களை முடக்க பிரான்சில் புதுசட்டம்

பிரான்சில் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் மிகத்தீவிரமாகியுள்ளது. இப்போராட்டத்தை அரசு முறையாக கையாலாத காரணத்தால் போராட்டங்கள் கலவரமாகவும் கொள்ளையடிக்கும் சம்பவங்களாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் தனிநபராகவும் பிறர்செய்யும் சேதங்களுக்கும் ரூ.10 லட்சம் வரை அபராதம் செலுத்த செய்யும் வகையில் புதிய சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் வன்முறையாளர்களுக்கு தான் என கூறப்பட்டாலும் நியாயமான போராட்டத்தில் ஈடுபடுபவர்களை முடக்க

வும் இது பயன்படுத்தப்படலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.