தாங்க முடியாத அழுத்தத்தில் அமெரிக்க ராணுவத்தினர்
21 Mar 2026, 2:42 pm
<p><strong>தாங்க முடியாத அழுத்தத்தில் அமெரிக்க ராணுவத்தினர்</strong></p>
<p>ஈரான் மீது ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நடத்தி வரும் போர், ஏற்கெ னவே பல்வேறு நாடுகளில் பணியில் ஈடுபட்டுள்ள அமெ ரிக்கப் படைகளுக்குத் தாங்க முடியாத அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பல பகுதிகளில் நிலை கொண்டுள்ள அமெரிக்க ராணுவம், இப்போது ஈரான் போருக்காகத் தனது வளங்க ளைத் திருப்பி விட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டுள்ளது. இது அமெ ரிக்காவின் ஒட்டுமொத்த ராணுவ வலிமையையும் நிதி நிலையையும் பாதிக்கும் என்று பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின் றனர். நீண்ட காலம் நீடிக்கும் இந்தப் போரின் தாக்கம், போர் முடிவுக்கு வந்த பின்னரும் அமெரிக்க ராணுவத்தின் செயல் திறனில் எதிரொலிக்கும். ஆயுதத் தளவாடங்களின் பற்றாக்குறை மற்றும் வீரர்க ளின் மன அழுத்தம் போன் றவை அமெரிக்காவின் உலகளாவிய பாதுகாப்புப் பொறுப்புகளைக் கேள்விக் குறியாக்கியுள்ளன.</p>
