வர்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்ய முடிவு ஜூன் 1-இல் இந்தியா வரும் அமெரிக்க குழு!
28 May 2026, 9:31 pm

வர்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்ய முடிவு ஜூன் 1-இல் இந்தியா வரும் அமெரிக்க குழு!

புதுதில்லி, மே 28 - இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகள் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்களை இறுதி செய்வது குறித்தும், இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் குறித்தும் விவாதிக்க அமெரிக்க குழு அடுத்த வாரம் வர உள்ளது.

பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான, இந்த அமெரிக்க வர்த்தகக் குழு ஜூன் 1 அன்று இந்தியாவுக்கு வருகிறது.

தொடர்ந்து ஜூன் 4 வரை, இந்தக்குழு இந்திய அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் 48 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அமெரிக்கப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மோடி அரசை மிரட்டி அமெரிக்கா பணிய வைத்தது.

இதற்கான தற்காலிக வர்த்தக ஒப்பந்தம் பிப்ரவரி மாதம் ஏற்பட்டது.

இதன் பிறகு தான், இந்தியா மீதான வரியை 50 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகித மாக குறைத்து அமெரிக்கா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.