தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் ஜவுளி, தோல் தொழில்கள் பாதிப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

18 Dec 2025, 4:38 pm
அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் ஜவுளி, தோல் தொழில்கள் பாதிப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
<p><strong>அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் ஜவுளி, தோல் தொழில்கள் பாதிப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்</strong></p> <p>சென்னை, டிச. 18 - இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 விழுக்காடு வரியால் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகளை இருதரப்பு ஒப்பந்தம் மூலம் விரைந்து தீர்க்க வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் 28 விழுக்காடும், தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 40 &nbsp;விழுக்காடும் பங்களிப்பு செய்து வரு கிறது. இந்தத் துறைகளில் 85 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். திருப்பூரில் மட்டும் ஏற்றுமதியா ளர்களுக்கு ரூ. 15 ஆயிரம் கோடி இழப்பும், 30 விழுக்காடு உற்பத்திக் குறைப்பும் ஏற்பட்டுள்ளது. திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் தினமும் 60 கோடி &nbsp;ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படு கிறது. பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சரிவின் விளிம்பில் உள்ளன. வியட்நாம், பங்களாதேஷ், கம்போடியா போன்ற நாடுகளுக்கு ஆர்டர்கள் மாறி வருவதால், சர்வ தேச சந்தை வாய்ப்புகளை மீட்பது கடினமாகும் என்றும், இது இளை ஞர்கள் குறிப்பாக பெண்களின் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு நீண்டகால அச்சுறுத்தலாகும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் எச்சரித்துள்ளார். விரைவான தீர்வு மூலம் ஏற்றுமதி யாளர்களின் வணிக நிலையை மீட்டெடுக்கவும், உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்தவும் முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.