தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டிரம்ப்பின் யுத்த நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம்!

24 Jun 2026, 10:51 pm
டிரம்ப்பின் யுத்த நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம்!

டிரம்ப்பின் யுத்த நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம்!

வாஷிங்டன், ஜூன் 24 - ஈரான் மீது டிரம்ப் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி யும், அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை களுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி யைப் பெறக் கட்டாயப்படுத்தும் ‘போர் அதிகாரங்கள் தீர்மானம்’ (War Powers Resolution) அமெரிக்க நாடாளுமன்றத் தின் செனட் (Senate) சபையில் நிறைவேறி யுள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து, ஈரான் மீது நடத்தி வரும் போரைத் தடுப்ப தற்கு அமெரிக்க நாடாளுமன்றம் மேற் கொண்ட 10-ஆவது முயற்சி இதுவாகும்

. இதேபோன்றதொரு தீர்மானம் கடந்த ஜூன் 3 அன்றும், நாடாளுமன்றத்தின் பிரதி நிதிகள் சபையில் (House of Representatives) 215-208 என்ற வித்தியா சத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை நடந்த செனட் சபையின் வாக்கெடுப்பிலும் 50-48 என்ற கணக்கில் இத்தீர்மானம் நிறை வேறியுள்ளது.

டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பில் காசிடி, லிசா முர்கோவ்ஸ்கி, சூசன் காலின்ஸ் மற்றும் ரேண்ட் பால் ஆகிய நான்கு செனட்டர்கள் தங்களது கட்சி நிலப்பாட்டை மீறி போர் நிறுத்தத் தீர்மா னத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு இரு சபைகளிலும் சிறிய அளவிலான பெரும்பான்மை மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“ஈரானுக்கு எதிரான விரோதப் போக்கிலிருந்து அமெரிக்க ஆயுதப் படைகளை டிரம்ப் திரும்பப் பெற வேண்டும்” என்று இந்தத் தீர்மானம் உத்தர விடுகிறது. இதன்படி, நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாகப் போர்ப் பிரகடனம் செய்தால் அல்லது குறிப்பிட்ட அனுமதி வழங்கினால் மட்டுமே டிரம்ப் ஈரானுக்கு எதிராக இனி ராணுவப் பலத்தைப் பயன்படுத்த முடியும்.

இருப்பினும், அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகள் மீது உடனடித் தாக்குதல் (Imminent Attack) ஏதேனும் நடத்தப்பட்டால், அதைத் தடுப்பதற்காக மத்திய கிழக்கில் குறைந்த அளவிலான அமெரிக்கப் படைகள் நீடிப்பதை இத்தீர்மானம் அனுமதிக்கிறது.

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் பெரும்பாலான அமெரிக்க மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. செவ்வாய்க் கிழமை வெளியான ஒரு கருத்துக்க ணிப்பில், வெறும் 24 சதவிகித அமெரிக்க மக்கள் மட்டுமே ஈரான் மீதான போர் தேவையானது என்று தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.