முந்தய பக்கம்

இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு 100% வரி விதிக்க அதிகாரம் - அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்!

8 Aug 2026, 1:23 pm
இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு 100% வரி விதிக்க அதிகாரம் - அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்!
<p>ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவிகிதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவை அமெரிக்க செனட் நிரைவேற்றியுள்ளது. </p><p>ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளான சீனா, இந்தியா, அசர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய 5 நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவிகிதம் வரை வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க ஜனாதிபதிக்கு இந்த மசோதா வழங்குகிறது. இந்த மசோதாவுக்கு மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் பெயரில் “ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகளை விதிக்கும் லிண்ட்சே ஓ. கிரஹாம் சட்டம்” என பெயரிடப்பட்டுள்ளது.</p><p>மேலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், ரஷ்ய தொழிலதிபர்கள், உயரதிகாரிகள் மற்றும் கிரெம்ளினுடன் தொடர்புடைய நிதி நிறுவனங்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், ஈரானின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு எதிரான 1996-ஆம் ஆண்டு ஈரான் தடைகள் சட்டத்தின் காலக்கெடுவையும் 2031-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram