தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

2 Oct 2026, 9:00 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

வெனிசுலா ஜனாதிபதி வழக்கு :அமெ.அரசு வழக்கறிஞர் விலகல்

வெனிசுலா ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸுக்கு எதிரான வழக்கை நடத்திய அமெரிக்க அரசு வழக்கறிஞர் ஜேசன் ஏ. ரிச்மேன் அவ்வழக்கிலிருந்து விலகியுள்ளார். மதுரோ போதைப்பொருள் கடத்துகிறார் என ஆதாரமற்ற குற்றத்தை முன்வைத்து அந்நாட்டை தாக்கி அவரை அமெரிக்க ராணுவம் கடத்திச் சென்றது. இது தொடர்பான வழக்கு விசாரணை 2027 ஜூன் 1 அன்று துவங்க உள்ளது. ஜேசன் விலகலுக்கு முழுமையான காரணங்கள் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தத்தக்கது.

ஏவுகணைகள் இருப்பை அதிகரிக்க ரூ.2 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம்

ஈரான் மீதான போரில் அமெரிக்காவின் ஏவுகணை இருப்பு குறைந்து விட்டது. இதனால் தனது ஏவுகணை இருப்பை விரைவாக அதிகரிக்கும் நோக்கில், ரேதியான் நிறுவனத்திற்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 5 ஆண்டு ஒப்பந்தத்தை அமெரிக்க பாதுகாப்புத் துறை வியாழக்கிழமை அறிவித்துள்ளது. ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு லாபம் அளிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தத்தை டிரம்ப் நிர்வாகம் வழங்கியுள்ளது. ஆயுத உற்பத்திநிறுவனங்கள் மிக வேகமாக ஆயுத உற்பத்தியைப் அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க அரசு வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

ஹவுதி படைகள் மீது ஏமன் படை தாக்குதல்

ஏமன் தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ஹவுதி ராணுவத்தலங்கள் மீது அந்நாட்டு ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதல்களை அரசு ராணுவ செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்நுஸைலி உறுதிசெய்துள்ளார். பாப் எல்-மந்தேப் நீரிணையை கட்டுப்படுத்தும் வகையில் ‘மோகா’ துறைமுகநகரத்தை செப்டம்பர் 10 அன்று ஹவுதி அமைப்புகைப்பற்றியது. அதன்பிறகு தற்போது ஏமன் அரசுப் படைகளுக்கும் ஹவுதிப்படைகளுக்கும் இடையில் மிகப்பெரிய மோதலாக இது உருவெடுத்துள்ளது. கடந்த ஜூலை மாதம்தொடங்கிய மோதல்களின் ஒரு பகுதியாகவே இந்தத் தீவிரத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.