தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கியூப மருத்துவத் திட்டங்களையும் முடக்க அமெரிக்கா நெருக்கடி!

4 Jul 2026, 9:45 pm
கியூப மருத்துவத் திட்டங்களையும் முடக்க அமெரிக்கா நெருக்கடி!

கியூப மருத்துவத் திட்டங்களையும் முடக்க அமெரிக்கா நெருக்கடி!

ஹவானா, ஜூலை 4 - அமெரிக்க ஏகாதிபத்திய மானது, சோசலிச கியூபா வுக்கு பல்வேறு வகைகளி லும் நெருக்கடியை அதி கப்படுத்தி வருகிறது. இதன் அடுத்தகட்டமாக, உலகெங்கிலும் உள்ள நாடு கள் கியூபாவுடன் வைத் துள்ள இருதரப்பு சுகாதார உதவித் திட்டங்களை முடி வுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகக் கியூ பாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கார் லோஸ் பெர்னாண்டஸ் டி கோசியோ குற்றம் சாட்டி யுள்ளார்

. இதுகுறித்து தனது முக நூல் பக்கத்தில் பதிவிட் டுள்ள அவர், “இந்த மருத்து வத் திட்டங்களை முடி வுக்குக் கொண்டுவர அழுத் தம் கொடுப்பதன் மூலம், பல ஏழை - எளிய மக்கள், அடிப் படை சுகாதாரச் சேவை களைப் பெறும் வாய்ப்பை இழந்து தவிக்கின்றன” என் றும் வேதனை தெரிவித்துள் ளார்.

ஐ.நா-வில் அமெரிக்காவின் அரசியல் தலையீடு

“கியூபா மீது அமெ ரிக்கா விதித்துள்ள நீண்ட காலப் பொருளாதார தடை களுக்கு எதிராக உலக நாடு கள் பாரம்பரியமாக எடுத்து வரும் நிலைப்பாட்டை மாற்றுமாறும், ஐ.நா. அவை யில் இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்கே மறுப்புத் தெரிவிக்குமாறும், பிற நாடு களுக்கு அமெரிக்கா அழுத் தம் கொடுத்து வருகிறது. அதேபோல கியூபா வுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்வதைத் தடுப்பதற்காக அமெரிக்கா விதித்துள்ள தடையை மற்ற நாடுகளைக் கட்டாயப்படுத்தி பின்பற்று மாறு செய்வதிலும் அமெ ரிக்கா தற்போது வெற்றி பெற்று வருகிறது” என்று கார்லோஸ் பெர்னாண்டஸ் டி கோசியோ கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த எரிபொருள் முற்றுகை ஒரு இனப்படுகொலை நட வடிக்கை. கியூப மக்கள் மீது திணிக்கப்படும் ஒரு ‘கூட்டுத் தண்டனை என்று கியூப அதி காரிகள் தொடர்ந்து கண்ட னம் தெரிவித்து வருகின்றனர். இந்தத் தடையின் கார ணமாகவே கியூபாவில் தின மும் நீண்ட நேர மின்வெட்டு, போக்குவரத்துத் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார முடக் கம் போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அதிகாரப்பூர்வ ஆதா ரங்களின்படி, கியூபா எவ் விதத் தடையுமின்றி சாதார ணமாக இயங்குவதற்கு மாதத்திற்குச் சுமார் 8 எரி பொருள் கப்பல்கள் தேவைப் படுகின்றன. ஆனால் கடந்த 6 மாதங்களில் ஒரே ஒரு கப் பல் மட்டுமே வந்துள்ளதால் நாட்டின் ஒட்டுமொத்த உள் கட்டமைப்பும் பெரும் நெருக் கடியைச் சந்தித்து வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.