ரால் காஸ்ட்ரோவைக் கடத்த அமெரிக்கா திட்டமிடுகிறதா?
27 May 2026, 8:12 pm

ரால் காஸ்ட்ரோவைக் கடத்த அமெரிக்கா திட்டமிடுகிறதா?

வெனிசுலா ஜனாதிபதி மதுரோ வையும் அவரது இணையரை யும் கடத்தியது போல, கியூபாவின் மகத் தான தலைவரான தோழர் ரால் காஸ்ட்ரோ வைக் கடத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் திட்டமிடுவதாகப் பரவலான செய்திகள் வெளி வந்துள்ளன. தென் அமெரிக்காவில் தன்னை கேள்வி கேட்கும் எந்தவொரு ஆட்சியும் இருக்கக் கூடாது என அமெரிக்க ஏகாதி பத்தியம் எண்ணுகிறது. வெனிசுலா வுக்குப் பின்னர் கொலம்பியா மற்றும் மெக்சிகோ இடதுசாரி ஆட்சிகளை மிரட்டிய டொனால்டு டிரம்ப் நிர்வாகம், இப்பொழுது கியூபாவை முடக்க எண்ணுகிறது. அதற் காக 1996-ஆம் ஆண்டு நடந்த நிகழ்வை, 30 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது பழி வாங்கலுக்குப் பயன்படுத்திட முனைந்துள் ளது. கியூபா அரசாங்கமும் கியூபா மக்களும் அமெரிக்காவின் இந்த நீசத்தனத்தைச் சந்திக்கத் தயாராகி வருகின்றனர்.

1996-இல் என்ன நடந்தது?

1991-92 காலகட்டத்தில் சோவியத் யூனிய னில் சோசலிசம் பின்னடைவைச் சந்தித்த பொழுது, கியூபாவின் சோசலிச ஆட்சியும் கவிழ்ந்துவிடும் என அமெரிக்க நிர்வாகம் மனப்பால் குடித்தது. ஏனெனில், கியூபாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்பத் தேவைகளில் மிகப்பெரிய பங்கை பூர்த்தி செய்தது சோவியத் யூனியன் அரசாங்கம் தான்! எனவே, சோவியத் வீழ்ச்சிக்குத் பின்னர் கியூபப் பொருளாதாரம் திணறி, சோசலிசம் பின்னடைவைச் சந்திக்கும் என அமெரிக்க நிர்வாகம் கணக்குப் போட்டது. கிழக்கு ஐரோ ப்பிய நாடுகளில் சோசலிசம் வீழ்ந்ததைப் போலக் கியூபாவும் அத்தகைய சூழலைச் சந்திக்கும் என்பது அவர்களின் கணக்கு.

ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. நெருக்கடியைச் சமாளிக்க “விசேட கால கட்டத்தை எதிர்கொள்வது எப்படி” எனும் ஒரு திட்டத்தைத் தோழர் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் கியூப அரசாங்கம் வடி வமைத்து, மக்களின் உதவியுடன் அன்றைய நெருக்கடியைச் சமாளிக்க முனைந்தது. இத்தகைய எதிர்வினையை அமெரிக்க ஏகா திபத்தியம் எதிர்பார்க்கவில்லை. எனவே, அவர்கள் கியூபாவை ஆத்திர மூட்டவும் அச்சு றுத்தவும் பல வழிகளைக் கையாண்டனர்.

அதில் ஒன்று, கியூபாவிலிருந்து 90 மைல்கள் தூரமே கொண்ட புளோரிடா மற்றும் மியாமியிலிருந்து முன்னாள் கியூபா அகதி களைப் (இவர்கள் கம்யூனிச எதிர்ப்பாளர் களும் ஆவர்) பயன்படுத்தி கியூபாவுக்குள் ஊடுருவப் பல முயற்சிகள் செய்யப்பட்டன. அப்படிப் பலமுறை அமெரிக்க விமானங் கள் கியூபாவின் வான்எல்லையை மீறி கியூபா வுக்குள் பயணித்தன. அந்த விமானங்களில் கியூபாவின் சோசலிச எதிர்ப்பாளர்கள் பய ணித்து பல துண்டுப் பிரசுரங்களைப் போட்ட னர். அதில் கியூப மக்களை பிடல் அர சாங்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழும்படி தூண்டிவிட்டனர். 1994 முதல் 1996 வரை 25 முறை கியூபாவின் வான்எல்லைகள் மியாமி குண்டர்களின் விமானங்களால் மீறப்பட்டன.

இத்தகைய சூழலில் கியூபா அரசாங்கம் 1995 ஆகஸ்டிலிருந்து 1996 பிப்ரவரி வரை குறைந்தபட்சம் நான்கு முறை அமெரிக்க அரசாங்கத்திடம் தனது வான்எல்லை மீறப்படுவதைக் கண்டித்து ஆட்சேபணை யை முன்வைத்தது. ஆனால், அமெரிக்க அரசாங்கம் அதனைக் கண்டுகொள்ள வில்லை. இத்தகைய சூழலில் 1996-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி கியூ பாவின் வான்எல்லையை மீறித் தலைநகர் ஹவானா மீது பறந்த விமானங்களைச் சுட்டு வீழ்த்துவது எனக் கியூபா அரசாங்கம் முடிவு செய்தது. அதற்கான ஆணையை பிடல் காஸ்ட்ரோவெளியிட, அன்றைய ராணுவ அமைச்சர் ரால் காஸ்ட்ரோ அதனை அம லாக்கினார். கியூபாவின் மிக் ரக விமானங்கள் பலமுறை எச்சரித்தும் கியூப எதிர்ப்பாளர்க ளின் விமானங்கள் பின்வாங்காததால் அந்த விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதில் 4 சோசலிச எதிர்ப்புப் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மதுரோவைப் போல ராலையும் கடத்த சதி!

இந்த நிகழ்வை முன்வைத்துதான் இப்பொழுது ரால் காஸ்ட்ரோ மீது கொலைக் குற்றம் சுமத்தி, அவர் அமெரிக்க நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வரவேண்டும் என அமெரிக்கச் சட்டத்துறை அறிக்கை வெளி யிட்டுள்ளது. ரால் மீது அமெரிக்கக் குடிமக்க ளைக் கொல்லச் சதி செய்தது, கொலை செய்தது மற்றும் அமெரிக்க விமானங் களைச் சுட்டு வீழ்த்தியது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. “ரால் காஸ்ட்ரோ தானாக வந்து நீதி மன்றத்தில் விசாரணையில் பங்கேற்க வேண்டும்; அல்லது வேறு வழியில் அவரை விசாரணையில் பங்கேற்க வைக்க வேண்டும்” எனப் புளோரிடா அரசு வழக்கறி ஞர் கூறியுள்ளார். “வேறு வழி” என்பது என்ன, கடத்தலா என்பதுதான் இப்பொழுது விவாதிக்கப்படும் பொருளாக மாறியுள்ளது.

மதுரோவைப் போல ராலும் கடத்தப் படுவாரா எனும் கேள்விக்கு, “அதுபற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை” என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க ஏகாதிபத்தியம், அதுவும் மது குடித்த குரங்கு போல ஆட்டம் போடும் டிரம்ப் நிர்வாகம் என்ன செய்யும் என்பதை எவரும் கூற இயலாது. எனவேதான் ராலைக் கடத்தும் திட்டம் இல்லை என உத்தரவாதமாக எவரும் கூற முடியாத சூழல் உள்ளது.

தாய்நாடு! அல்லது வீரமரணம்!

ரால் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு களைப் பலரும் கண்டித்துள்ளனர். ஜெஃப்ரி சாக்ஸ், ஹெலன் யஃபி போன்ற அமெரிக் கப் பேராசிரியர்கள் இது அப்பட்டமான ஏகாதி பத்திய அணுகுமுறை என விமர்சித்துள்ளனர். கியூபா ஜனாதிபதி மிகுயேல் தியாஸ் கேனல் அவர்களும் கியூபா அரசாங்கமும் அமெரிக்காவின் தான்தோன்றித்தனத்தை அனுமதிக்க முடியாது என உறுதிபடக் கூறி யுள்ளனர்.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கியூபா மீது பல கொடூரமான தடைகளை அமெரிக்கா விதித்து வந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நா. பொதுச் சபை கியூபா மீதான தடையை அகற்ற வேண்டும் என மிக பெரும்பான்மை அடிப்ப டையில் தீர்மானம் நிறைவேற்றினாலும் அமெரிக்கா அதனை மதிப்பது இல்லை. சோவியத் யூனியன் பின்னடைவுக்குப் பின்னர் கியூபா சிதைந்துவிடும் என மதிப்பிட்டனர்; அதுவும் நடக்கவில்லை. இப்பொழுது ஒரு சொட்டு எரிசக்தியும் கியூபா பெற முடியாத வண்ணம் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் தடைவிதித்துள்ளது. கியூபாவிலிருந்து ஓடி வந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஒரு குடும்பத்தின் உறுப்பினராகவும், வெளியுறவு அமைச்சராகவும் உள்ள மார்கோ ரூபியோ எப்படியாவது கியூபாவில் சோசலிசத்தை அழிக்க வேண்டும் என வெறி கொண்டு அலைகிறார்.

எனினும், வெனிசுலா அனுபவத்திற்குப் பின்னர் கியூபா தன்னை ராணுவ ரீதியாக வலுப்படுத்தி வருகிறது எனச் செய்திகள் உள்ளன. கியூபா ஏராளமான ட்ரோன்களை வாங்கிக் குவித்திருப்பதாகவும், அதனால் அமெரிக்காவுக்கு ஆபத்து எனவும் புதிய பீதியை அமெரிக்கா கிளப்பியுள்ளது. ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகளாக இருந்தாலும், அணு ஆயுதங்களாக இருந்தாலும் அவற்றை வைத்திருக்கும் உரிமை தனக்கு மட்டும்தான் என அமெரிக்க ஏகாதிபத்தியம் எண்ணுகிறது.

இந்தச் சூழலில்தான் தோழர் ரால் காஸ்ட்ரோவின் 95-ஆவது பிறந்த தினத்தை வரும் ஜூன் 3-ஆம் தேதியன்று விமரிசை யாகக் கொண்டாடுவது எனக் கியூபா இளம் கம்யூனிஸ்டுக் கழகம் முடிவு செய்துள்ளது. பொதுவாக இது போன்ற நிகழ்வுகளை கம்யூனிஸ்ட்டுகள் ஊக்குவிப்பது இல்லை. எனினும், இந்த முறை அவரது பிறந்த நாள் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கண்டன நாளாகவும் அமையும்.

“தாய்நாடு! அல்லது வீரமரணம்!” எனும் முழக்கத்துடன் எத்தகைய சூழலையும் சந்தி க்கக் கியூப கம்யூனிஸ்டுகள் தயாராக உள்ளனர். - அ.அன்வர் உசேன்