தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்காவின் போர் வெறி; லாபத்தில் மிதக்கும் எண்ணெய் நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் மூழ்கும் பொதுமக்கள்

53 minutes before
அமெரிக்காவின் போர் வெறி; லாபத்தில் மிதக்கும் எண்ணெய் நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் மூழ்கும் பொதுமக்கள்

அமெரிக்காவின் போர் வெறி; லாபத்தில் மிதக்கும் எண்ணெய் நிறுவனங்கள்

பொருளாதார நெருக்கடியில் மூழ்கும் பொதுமக்கள்

வாஷிங்டன்,நவ.5-ஈரான் மீதான அமெரிக்கா இஸ்ரேல் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் , எண்ணெய் மற்றும்இயற்கை எரிவாயு நிறுவனங்கள் இதுவரை இல்லாத அளவுக்குப் பிரம்

மாண்ட லாபத்தை ஈட்டியுள்ளதாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

‘தி நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில் அமெரிக்காவின் 51பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் மொத்தமாக 12.28 லட்சம் கோடி ரூபாய்க்கும் (130 பில்லியன் டாலருக்கும் அதிகம்) அதிகமான லாபத்தைப் பெற்றுள்ளன.2025 இல் இதே காலகட்டத்தில் இந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த லாபம் ரூ.4.44 லட்சம் கோடியாக (47 பில்லியன்டாலர்) இருந்தது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் விலை உயர்வால் மக்களின் அன்றாட வாழ்க்கை செலவுகள் அதிகரித்து வருகிறது. இது ஒவ்வொரு ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்திலும் கடும் நெருக்கடியை உருவாக்கி வருகிறது. பிரவுன் பல்கலைக்கழகத்தின் காலநிலை தீர்வுகள் ஆய்வகத்தின் பகுப்பாய்வின்படி, பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்க மக்கள் பெட்ரோல் மற்றும் டீசலுக்காக மட்டும் கூடுதலாக 14.17 லட்சம் கோடி ரூபாய் (150 பில்லியன் டாலர் ) செலவிட்டுள்ளனர். இது ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 1 லட்சத்து 8 ஆயிரத்து 617 ரூபாய் கூடுதல்செலவாகும்.

உலகின் மிகப்பெரிய அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களான எக்சான்மொபில் & செவ்ரான் சுமார் 94,450 கோடி முதல் 1.41 லட்சம் கோடி ரூபாய்வரை லாபம் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளன. வலேரோ எனர்ஜி நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு லாபம் ஆறு மடங்குக்கும் மேல் அதிகரித்து 64,510 கோடி ரூபாயை எட்டியுள்ளது.பிலிப்ஸ் 66 நிறுவனம் அதன் வரலாற்றில் இல்லாத வகையில் நிகர லாபம் 53,080 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் தொடுத்துள்ள போரானது அமெரிக்கா துவங்கி உலகம் முழுவது உள்ள பெரு

முதலாளிகளின் லாபத்தை மட்டுமே அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா துவங்கி உலகின் பிறநாடுகளில் வசிக்கும் உழைப்பாளி மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.